விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைப்பெற்றது. வாக்குப்பதிவு ஜூலை 10 -ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட அதிமுகவும், தேமுதிகவும் பின்வாங்கிய நிலையில், திமுக, பாமக, நாதக இடையிலான மும்முனைப் போட்டியாக களம் மாறியிருக்கிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி திமுக வேட்பாளர் மணிக்கு பயங்கர டப் கொடுத்து கடைசி நேரத்தில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை பாமக இழந்தது.
இதனுடைய தாக்கம் விக்கிரவாண்டியில் ஏற்படுத்தி பாமக வென்று விடுமோ என்கிற பயத்தினால் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சியான திமுக பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வருகிறது. காவல்துறையும் ஆளுங்கட்சி தான் சாதகமாக இருக்கிறது.
இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி விக்கிரவாண்டி தொகுதி, ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுகவினர் ஓட்டுக்கு வேஷ்டி சேலை வழங்கியதாகவும் அதனை பாமகவினர் தடுத்து நிறுத்தி அவர்கள் கொடுக்க வைத்திருந்த வேஷ்டி சேலைகளை பிடுங்கி ரோட்டில் எறிந்துள்ளனர். இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.