தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சாலை ஒன்றுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை ஷேர் செய்திருந்தார். மேலும் அவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லாந்தை பெரிய தாமரைக்குடி சின்ன தாமரை கொடி ஆகிய கிராமங்களுக்கு ரயில்வே மேம்பாலம் அமைத்துக் கொடுத்தார் மத்திய அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன்.
பல வருடங்கள் கோரிக்கையாகவும் ஏக்கமாகவும் இருந்த மக்கள் பிரச்சனையை ஒரே நாளில் ரயில்வே அமைச்சகத்துடன் பேசி செய்து கொடுத்தார் நிதி அமைச்சர். கிராம மக்கள் தங்கள் ஊருக்குச் செல்லும் பிரதான சாலைக்கு நிதியமைச்சரின் பெயரை சூட்டி உள்ளார்கள். கிராம சபைக் கூட்டத்தில் மேடம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள் என்று பதிவிட்டிருந்தார். இது போட்டோ ஷாப் செய்யப்பட்டது என்று பலரும் கிண்டல் அடித்தனர். நிர்மலா சீதாராமன் பெயரில் சாலைக்கு பெயர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், அது இருக்கட்டும் உங்க கட்சி தலைவர் இதுவரை வேங்கைவாசல் போனார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் நிர்மலா சீதாராமன் சாலை அமைக்கப்பட்டுள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் ராமசீனிவாசன். தங்களுக்கு பாலம் கட்டி கொடுப்பதாக நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளதால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் கிராமத்தில் உள்ள சாலைக்கு நிர்மலா சீதாராமன் பெயரை சூட்டியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.