உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பிரபல அமெரிக்க எழுத்தாளர் ரெனீ லின் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், பாரதப் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஹிந்து மக்களுக்கு தங்களது வாழ்த்து செய்திகளை தெரிவித்து இருக்கின்றனர். தமிழகம் தவிர்த்து அனைத்து மாநில முதல்வர்களும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியை தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில், சமூக ஆர்வலர், ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் எனும் பன்முகத் தன்மை கொண்ட ரெனீ லின். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
இந்துக் கடவுள்களையோ பசுக்களையோ வணங்கியதற்காக என்னை வகுப்புவாதி என்று சொல்லாதீர்கள் அல்லது கேலி செய்யாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்து மதம் இந்தியாவில் இருந்து தோன்றிய உலகின் பழமையான மதம். அவர்கள், எந்த நாட்டையும் தாக்கவில்லை அதேபோல எதன் மீதும் படையெடுக்கவில்லை. உலகில், மனிதாபிமானம் மிக்க ஒரே மதம் இந்து மதம் என குறிப்பிட்டு இருக்கிறார்.
ஹிந்து மதத்தின் மேன்மை மற்றும் பாரத நாட்டின் தொன்மையை முழுமையாக உணர்ந்து கொண்ட அமெரிக்க எழுத்தாளர் கூட ஹிந்துக்களுக்கு தனது வாழ்த்து செய்தியை தெரிவித்து இருக்கிறார். ஆனால், ஹிந்துக்களின் ஓட்டுக்களை பெற்று ஆட்சியில் அமர்ந்து இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வரை தனது வாழ்த்து செய்தியை தெரிவிக்கவில்லை.
ஹிந்துக்களின், பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்ல மனமில்லாத தி.மு.க.விற்கு வாக்களிக்கும் ஹிந்துக்கள் எப்போது? விழிப்புணர்வு அடைகிறார்களே அன்று தான் தமிழகத்திற்கும் சேர்த்து முழுமையான விடுதலை கிடைக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.