அதிகம் விரும்பப்படும் நாடுகளின் வரிசையில் நாம் 2-வது இடத்தில் இருக்கிறோம் – நிர்மலா சீதாராமன் !

அதிகம் விரும்பப்படும் நாடுகளின் வரிசையில் நாம் 2-வது இடத்தில் இருக்கிறோம் – நிர்மலா சீதாராமன் !

Share it if you like it

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி நடந்து வருகிறது. இதில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து மாநிலங்களவையில் நேற்று நடந்த விவாதத்தின்போது பேசிய, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டு வளர்ச்சி உலகளவில் மிக அதிகமாக இருந்தது.

இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை நாம் தொடர்ந்து தக்க வைத்து வருகிறோம். சில குறிப்பிட்ட துறைகள் மட்டுமின்றி, அனைத்துத் துறைகளுமே கணிசமாக வளர்ச்சி அடைந்து வருவதால், இது சாத்தியமாகி இருக்கிறது.

‘மேக் இன் இந்தியா’ மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்கள் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி துறைகளும் பெரும் பங்காற்றி இருக்கின்றன. உற்பத்தித் துறையில் அதிகம் விரும்பப்படும் நாடுகளின் வரிசையில் நாம் 2-வது இடத்தில் இருக்கிறோம்.

இந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி வரை நேரடி வரி வசூல் 21.82 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஜி.எஸ்.டி. மாத வசூல் 1.60 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையிலான சில்லரை பணவீக்கம் 2022 ஏப்ரலில் அதிகபட்சமாக 7.8 சதவீதத்தை தொட்டது. தற்போது ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்தை நெருங்கி விட்டது” என்றார்.


Share it if you like it