ஊரடங்கை முதல்வர் அறிவித்த நிலையிலும் திமுகவினரின் ஆடம்பரம், அலப்பறை, கொண்டாட்டம் என எதற்கும் குறைவில்லாமல் ஓடி கொண்டிருக்கிறது. கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கோலாகலமாக கூட்டம் கூட்டி கொண்டாடியதில் கொரோனாவும் மகிழ்ந்து போனது. மக்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை கூட ஏதோ அறிவாலய சொத்தில் இருந்து எடுத்து கொடுப்பது போல், இவர்களின் விளம்பரத்திற்காக கூட்டம் கூட்டி மக்கள் உயிரை ஆபத்தில் தள்ளும் செயலை திமுக தொடர்ந்து செய்து வருகிறது.
அது போன்ற மேலும் ஒரு சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தி.மு.க., சார்பில், 1,500 பேருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு அப்பகுதியினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதில் சுமார் 200க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் சமூக இடைவெளி இல்லாமல் கலந்துகொண்டதோடு சுமார் 800க்கும் மேற்பட்ட பொதுமக்களையும் வரிசையில் நிற்கவைத்தனர். இதனால் திருச்சி மாநகரில் கொரோனா பரவும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாக திருச்சி வாழ் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கை ஒரு சீனியர் அமைச்சரே மதிக்கவில்லை எனில் சாமானியர் எப்படி மதிப்பர் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.