நாங்களும் இனி பிளைட்ல போவோம் !

நாங்களும் இனி பிளைட்ல போவோம் !

Share it if you like it

அமெரிக்காவில் நாய்களுக்கு உகந்த விமான சேவை முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

பொதுவாக விமானங்களில் நாய்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பதால், அமெரிக்காவின் பார்க் விமான நிறுவனம் நாய்கள் பயணிக்க வழிவகை செய்துள்ளது.

இந்த விமானத்தில் நாய்களுக்காக பிரத்யேக இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை இந்த விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாய்களை அதன் உரிமையாளர் பயணத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக விமான நிலையம் அழைத்து வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share it if you like it