தமிழகத்தில் தமிழர்களை தவிர மற்ற மாநிலத்தவர்களுக்கு எந்த அடிப்படையில் வேலை தரப்பட்டது என்பது பற்றி விரிவான ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று நிதியமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்தியா என்பது ஒரு நாடு, எந்த மாநிலத்தில் நாம் பிறந்தாலும் வேறு எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் சென்று கல்வி கற்க, வேலை பார்க்க, பணம் சம்பாதிக்க முடியும் ஏன்? விரும்பிய இடத்தில் வாழும் உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்துக்கு பிற மாநில இளைஞர்கள் வருவது போல் நம் மாநில இளைஞர்களும் பிற மாநிலங்களுக்குப் போய் பணியாற்றுகின்றனர். அங்குள்ள மாநில அரசுப் பணிகளில் அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் விடியல் ஆட்சி பொற்றுப்பேற்ற பின்பு தொடர்ந்து பிரிவினையை தூண்டும் விதமான கருத்துக்களையே தமிழக நிதியமைச்சர் இன்று வரை பேசி வருகிறார் என்பது அனைவரின் பார்வையாக இருந்து வருகிறது. வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு எப்படி வேலை தரப்பட்டது என்று ஆய்வு மேற்கொள்வோம். ஆனால் இந்தியர் அல்லாத அண்டை நாட்டவர்கள் இங்கு வந்து வாழ மட்டும் நாங்கள் முட்டு கொடுப்போம் இது தான் தி.மு.கவின் சுயரூபம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.