உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரானா வைரஸ் தொற்று. இந்தியா கொரானா தொற்றை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு கொரானாவினை வெல்வதற்கு பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
கொரோனா நோய் தொற்றினை தடுக்க உலகத்திற்கே வழி காட்டியது நமது இந்தியா. ஆம் உலகத்திலேயே அதிகப்படியான மக்கள் தொகையை கொண்ட இரண்டாவது நாடு நமது பாரத நாடு. இப்படிப்பட்ட மக்கள் தொகையில் இந்தியா எப்படி கொரானாவை எதிர்கொள்கிறது! என்றும் மத்திய அரசு கொரானாவினை அடக்குவதற்கும் கையாண்ட யுத்திகளை பார்த்து உலகமே வியப்பில் உள்ளது. இந்தியா கொரோனா நோய் தொற்றினை அழிக்க கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து உலகத்தில் உள்ள 84 நாடுகளுக்கு வழங்கியுள்ளது அதில் 25 நாடுகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. எதிரி நாடான பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் இலவசமாக வழங்கியதை பார்த்து உலகமே இந்தியாவை பாராட்டி வருகிறது.
உலக தடுப்பூசி ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 60 சதவீத உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது உலக சந்தையில் இந்தியா தடுப்பூசி சிறந்த தரத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி சொந்த நாட்டு மக்களுக்கு இலவசமாகவும் சந்தையில் குறைவான விலையிலும் கொடுக்கிறது. கோவாக்சின் வருடத்திற்கு 20 கோடி தயாரிப்பதை 70 கோடி டோஸாகவும், கோவிஷீல்டு வருடத்திற்கு 120 டோஸாகவும் உற்பத்தித் திறனை உயர்த்தி மொத்தம் 190 கோடி டோஸை இந்தியாவால் ஓராண்டில் தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. தடுப்பூசி திருவிழா நடத்தி, குறிப்பிட்ட நாளுக்குள் தடுப்பூசி போடுவதை இலக்காக எடுத்துக்கொண்டு அந்த திட்டத்தினை விரைந்து செயல்படுத்தி உலக நாடுகளின் வரிசையில் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் படிப்படியாக கட்டுப்பாட்டுக்கு வந்த கொரோனா தொற்று தற்போது இரண்டாவது அலையில் கோரதாண்டவம் ஆட ஆரம்பித்துள்ளது கொரோனாவை தடுக்க உலக நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசியை வழங்கியுள்ளது ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் ஊடகங்கள் அவர்களின் பிழைப்புக்காக ஊடகத்தில் பொய்ப் பிரச்சாரங்களையும், கொரோனா குறித்த பீதியையும் புரளிகளையும்,அச்சத்தையும் அதிகமாக ஏற்படுத்தி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலை கூட தனக்கு சாதகமாக பயன்படுத்தி எதிர் கட்சியினர் அரசியல் செய்கின்றனர்.
தடுப்பூசி கண்டுபிடிக்காத வரை இன்னும் கொரோனவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றும், கண்டுபிடித்தவுடன் இலவசமாக தர மாட்டாங்க என்றும், இலவசமாக கொடுத்தால் தடுப்பூசியால் தான் மரணம் தடுப்பூசியை தடைசெய்ய என்றும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட அரசியல் தலைவர்களின் தொண்டர்களே பொய் பரப்புரை செய்து வருகின்றனர்.
அது மட்டுமா?
மருத்துவமனை பற்றாக்குறை? படுக்கைக்கு பற்றாக்குறை? ஆக்சிஜன் இல்லை என்று திரும்பிய இடமெல்லாம் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மக்கள் மனதில் தவறான எண்ணங்களையும், பீதியையும் விதைத்து வருகின்றனர்.
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயில், கடற்படையின் கப்பல்கள், ராணுவத்தின் போர் விமானங்கள் போன்றவற்றை பயன்படுத்தி ஆக்சிஜன் மற்றும் அதன் தொடர்பான பொருட்களை தேவை உள்ள மாநிலங்களுக்கு எல்லாம் அனுப்புவது, நாடு முழுவதும் 64 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய 4000 ரயில் பெட்டிகளை கோவிட் சிகிச்சை முகாம்களாக தயார் செய்தது என சாத்தியம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி கொரானாவுக்கு எதிராக போராடி வருகிறது மத்திய அரசு.
அயோத்தி ராமர் கோயில், வல்லபாய்படேல் சிலைகளுக்கு பதிலாக மத்திய அரசு மருத்துவமனை கட்டியிருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவிவருவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.
இதில் உண்மைதான் என்ன?
அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த 2,100 கோடி நிதி ஹிந்துக்கள் கோவிலை கட்ட தானாக மனமுவந்து கொடுத்ததே அன்றி அரசிடம் இருந்து ஒரு ருபாய் கூட வாங்கவில்லை.
வல்லபாய் பட்டேல் சிலைக்கும் அதே கதைதான் சர்தார் வல்லபாய் பட்டேல் டிரஸ்ட் மூலமாக பொதுமக்கள் கொடுத்த நிதிதான். வல்லபாய் படேல் சிலை தேவையா என்று குஜராத் மாநில மக்களே கேட்காத போது இங்குள்ள போராளிகள் எதற்கு கூவ வேண்டும். இதே ராமர் கோவிலுக்காக திரட்டப்பட்ட பணத்தில் ரெண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஊடகத்திலாவது இதை சொன்னார்களா? இல்லை…
அடுத்ததாக, தமிழகத்தில் தயாரான ஆக்சிஜனை ஆந்திராவிற்கு அனுப்பி தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தது மத்திய அரசு என்று கூறுபவர்களே? பூனேவில் இருந்து வரும் தடுப்பூசி மருந்து கொடுக்க முடியாது என்று அவர்கள் கூறினால் என்ன ஆகும் நமது கதை..? என்று நினைத்து பார்க்க வேண்டும். மக்களிடம் மாநிலவெறியை,மொழிவெறியை ஏற்படுத்தி அவர்களுள் வெறுப்பை விதைக்கிறார்கள். தமிழக திராவிட கட்சிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்
டெல்லி மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகமாக காரணம் அந்த மாநில அரசின் மெத்தனப் போக்கே. புதிதாக எட்டு ஆக்சிஜன் மையங்கள் அமைக்க மத்திய அரசு பல மாதங்களுக்கு முன்பே நிதி ஒதுக்கீடு செய்தும் டெல்லி அரசு ஒரே ஒரு மையம் மட்டும் அமைத்து அலட்சியமாக இருந்துள்ளது. மகாராஷ்டிராவின் கதையும் அதேதான் இது போன்ற காரணத்தினாலே அந்த மாநிலத்தில் உயிரிழப்புகள் அதிகமாகியுள்ளது.
மற்ற நாடுகளில் ஆளும் கட்சிகளும் எதிர்க் கட்சிகளும் ஒருங்கிணைந்து கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் மத்திய அரசாங்கத்தை குறை சொல்லியும் இழிவுபடுத்தியும் மலிவு அரசியல் செய்து வருகின்றனர்.
இந்தியா கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. இந்தியர்களாகிய நமக்கும் இதில் பொறுப்பு உள்ளது.
எவன் செத்தால் எனக்கென்ன? என்று இல்லாமல் அரசின் விதி முறைகளை பின்பற்றி கொரோனவை வெல்ல அரசிற்கு துணை நிற்போம்.
தடுப்பூசி என்பது மருந்து மட்டுமல்ல கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நமது ஆயுதமாகும். அதைக் கொண்டு கொரானாவை வீழ்த்துவோம்!!!
அரசுக்கு துணை நிற்போம்!! வெறுப்பை வேரறுப்போம்!!
சுசிலா B.Sc.,L.LB