மேற்கு வங்காள தேர்தல் – படுதோல்வியை நோக்கி அடி எடுத்து வைக்கும் மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள தேர்தல் – படுதோல்வியை நோக்கி அடி எடுத்து வைக்கும் மம்தா பானர்ஜி

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டத்தை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் கூறியுள்ளார்.

தொடர்ந்து சட்டவிரோதமாக இஸ்லாமியர்கள் மதம் மாற்றும் எண்ணத்தோடும் பாரதத்தில் அவர்களின் ஜனத்தொகையை அதிகரித்து பாரத நாட்டை அவர்களின் கட்டுக்குள் கொண்டுவரும் விஷமத்தனமான முயற்சியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை சார்ந்த இஸ்லாமியர்கள் திட்டமிட்டு அதை நடைமுறை படுத்த முயற்சி செய்து வந்தனர்.

இந்த அபாயத்தை புரிந்து கொண்ட மத்திய அரசு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையின மதத்தினர் படும் அவல நிலையையும் கருத்தில் கொண்டு புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தியது.

அந்த சட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் மத ரீதியாக துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் பாரதத்திற்கு தஞ்சம் தேடி வந்தால் குடியுரிமை வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தது.

இதனால் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை சார்ந்த இஸ்லாமியர்களின் விஷமத் தனமான எண்ணம் நிறைவேறாமல் போய்விடும் என்கின்ற உண்மையை உணர்ந்த அவர்கள் பாரதத்தில் உள்ள பிரிவினைவாத சக்திகள் மற்றும் தேச விரோத அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்து குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பல விதமான போராட்டங்களை நடத்தி வந்தனர்.

மக்களிடையே பெரும் அளவிற்கு ஆதரவு கிடைக்காததினால் அனைத்துப் போராட்டங்களும் தோல்வியடைந்தது.

அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதினால் இஸ்லாமியர்களின் வாக்கு பெறுவதற்கு மீண்டும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பது போல் ஹிந்து விரோத தேசவிரோத மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இது அம்மாநில இந்துக்களிடையே மமதா பானர்ஜி மற்றும் மேற்கு வங்காள மாநில அரசின் மீது மிகப் பெரிய அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it

2 thoughts on “மேற்கு வங்காள தேர்தல் – படுதோல்வியை நோக்கி அடி எடுத்து வைக்கும் மம்தா பானர்ஜி

  1. போகாத ஊருக்கு வழி சொல்றாங்க பாஜக, RSS காரங்க. நாட்டின் முன்னேற்றத்துக்கு திட்டங்கள் தீட்டி செயல் படுத்தாது , மதவெறியை மக்கள் மத்தியில் உருவாக்கி , அதன் மூலம் கலவரம் உண்டாக்கி , ஆட்சியை தக்கவைக்க நினைக்கின்றார் மோடி. பெட்ரோல் மீது காங்கிரஸ் அரசு விதித்த வரியை விட 400% வரியை கூட்டி ,சாதாரண மக்களிடம் கடந்த6.5 ஆண்டுகளில் 13.5 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து உள்ளார் மோடி. ஆகவே மோடி மற்றும் அவரது மதவெறியர்களின் கூட்டத்தை எச்சரிக்கை யாக மக்கள் பார்க்க வேண்டும்.

Comments are closed.