பா.ஜ.க.வினர் வீடுகளுக்கு தீவைப்பு; 8 பேர் பலி: தமிழக ஊடகங்களால் மறைக்கப்பட்ட செய்தி!

பா.ஜ.க.வினர் வீடுகளுக்கு தீவைப்பு; 8 பேர் பலி: தமிழக ஊடகங்களால் மறைக்கப்பட்ட செய்தி!

Share it if you like it

மேற்குவங்க மாநிலத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தீவைத்ததில், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில்தான் இப்படியொரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பிர்பும் மாவட்டம் பர்ஷால் ஊராட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாது ஷேக். இவர், கடந்த 21-ம் தேதி இரவு அடையாளம் தெரியாத கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க.வினர்தான் என்று நினைத்து ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், அன்றையதினம் இரவோடு இரவாக பா.ஜ.க.வினர் வசிக்கும் ராம்புர்கர் பகுதியிலுள்ள 12 வீடுகளுக்கு தீவைத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வாகனத்தையும், உள்ளே விடாமல் தடுத்து விட்டனர். இதனால், மொத்த வீடுகளும் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.

இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பா.ஜ.க.வினர் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதனிடையே, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அம்மாநில பா.ஜ.க. எம்.பி.க்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, மேற்குவங்க மாநில அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறார் அமித்ஷா.

மேலும், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்து உண்மை நிலையைக் கண்டறிய பா.ஜ.க. எம்.பி.க்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை பா.ஜ.க. தலைமை நியமித்திருக்கிறது. ஏற்கெனவே, மேற்குவங்கத்தில் கடந்தாண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்தபோது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், பா.ஜ.க.வைச் சேர்ந்த ஏராளமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்திலிருந்து மேற்குவங்க மாநிலத்துக்குள் ஏராளமான இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள். இவர்கள், இங்கேயே குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக இவர்கள் இருப்பதால், அம்மாநில முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, இவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு கடந்த சில வருடங்களாகவே நிலவி வருகிறது. இது தேசத்துக்கு அச்சுறுத்தல் என்று கருதி பா.ஜ.க.வினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதுதான் வன்முறைக்கும், மோதலுக்கும் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த செய்தியை தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. இதே உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாற்று சமுதாயத்தினருக்கு ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால், தமிழக மீடியாக்கள் விவாத மேடை அமைத்து ஒரு வாரத்துக்கு கத்திக் கொண்டிருந்திருப்பார்கள். எல்லாம் காலத்தின் கோலம்…


Share it if you like it