சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தனது மகன் கார்த்திக்கு ஆதரவு கேட்டு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரசாரம் செய்தபோது கிராம மக்கள் பல கேள்விகளை எழுப்பியதால் பதில் சொல்ல முடியாமல் திணறினார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட மித்ராவயல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சென்றிருந்தார். அப்போது மக்கள் அவரை பார்த்து சரமாரி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் ப.சிதம்பரம்.
இது வரை தொகுதி பக்கமே கார்த்தி வரவில்லை. தொகுதிக்கு என்ன செஞ்சீங்க.? 40 வருடத்திற்கு முன்பு இருந்த ஆஸ்பத்திரி வசதி இப்ப இல்லை. ஒரு ஆஸ்பத்திரி கூட இல்லை. இனிமேல் யாரும் இந்த பக்கம் ஓட்டு கேட்டு வரக்கூடாது. காங்கிரசுக்கு ஓட்டு போட முடியாது. யாரும் வந்தால் கல்லை கொண்டு அடிப்போம் ‘ என எச்சரித்தனர். இதனையடுத்து பிரசாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு நடை கட்டினார் சிதம்பரம்.
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம், அதிமுக சார்பில் சேவியர்தாஸ், பா.ஜ. கூட்டணி சார்பில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார்.
https://x.com/NewsTamilTV24x7/status/1775027049758961842?s=20