சமூக வலைதளத்தில் அமைச்சர் துரைமுருகன் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் செய்தியாளர் ஒருவர் துரைமுருகனிடம், அமலாக்கத்துறையானது எப்பொழுது வேண்டுமானாலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டு கதவை தட்ட வாய்ப்பு உள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளாரே அதுகுறித்து கேட்டுள்ளார்.
அதற்கு துரைமுருகன் அமலாக்கத்துறைக்கு அந்த கஷ்டம் வேண்டாம், நாங்களே கதவை திறந்து வைக்கிறோம் என்று கூறினார். அதன்பிறகு தமிழகம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலமாக உள்ளது என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, அதை சொல்வதற்கு அண்ணாமலை என்ன பொருளாதார மேதையா என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
துரைமுருகன் பேசியதற்கு பதிலடி தரும் வகையில் அண்ணாமலை, ஆமாங்க நான் MBA பைனான்ஸ் படிச்சிருக்கேன், IIM லக்னோல படிச்சிருக்கேன், பத்துலட்சம் பேர் எழுதுன CAT தேர்வுல 99.4% வாங்கி தேர்ச்சி அடைஞ்சிருக்கேன். கொஞ்சம் பைனான்ஸ் தெரியும். துரைமுருகனுக்கு தெரிந்ததை விட எனக்கு அதிகம் பைனான்ஸ் தெரியும் என்று அண்ணாமலை பேசிய காணொளி படு வைரலாகி வருகிறது.
https://x.com/SuryahSG/status/1754112312229986801?s=20