தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான தேர்வாணைய நிறுவனத்தில் புதிதாக 4 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர்க்கான தேர்வானையில் (டி.என்.பி.எஸ்.சி) ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் பாலச்சந்திரன் உள்ளார். மேலும் 14 உறுப்பினரில் 2 பேர் மட்டுமே உள்ளார்கள், 12 உறுப்பினர்களுக்கான நியமனம் நடை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மை துறை செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது.
தமிழ்நாடு அரசு பணியாளர்க்கான தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) உறுப்பினர்களாக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.முனியநாதன் (தற்போது தொழிலாளர் நலஆணையர்), பேராசிரியர் கே.ஜோதி சிவஞானம் (சென்னை பல்கலைக்கழ பொருளாதார துறை தலைவர்), முனைவர் கே.அருள்மதி (சென்னை), அருட்தந்தை ஏ.ராஜ் மரியசூசை (டான் போஸ்கோ, ஏற்காடு). இவர்களை தமிழக ஆளுநர் நியமித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு பணிகளில், கிருஸ்துவர்களாக இருந்து கொண்டு இந்து பெயர்களை கொண்ட சான்றிதழ் அளித்து அரசு பணிகளில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வாணையில் உறுப்பினராக பாதிரியார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதை கண்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.