கல்வியறிவில் பின்தங்கியுள்ள பீஹார் மாநிலமே நீட் தேர்வை வரவேற்கும்போது, திமுக அரசு மட்டும் தமிழ்நாட்டில் எதிர்ப்பது ஏன் ?

கல்வியறிவில் பின்தங்கியுள்ள பீஹார் மாநிலமே நீட் தேர்வை வரவேற்கும்போது, திமுக அரசு மட்டும் தமிழ்நாட்டில் எதிர்ப்பது ஏன் ?

Share it if you like it

ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு மற்றும் நீட் தேர்வை குறித்து செய்தியாளர் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளதாவது : – “கோவை, மதுரை, கன்னியாகுமாரி, தூத்துக்குடி இதுபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் ஆறு மாதத்திற்கு முன்பு நடந்து கொண்டிருந்தன. இந்த விஷயத்தில் ஆட்டை கடித்து மாட்டை கடித்து, கடைசியில் மனிதர்களே கடித்ததை போல இன்று ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

தற்போது தமிழ்நாட்டுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்திருக்கிறார். அவர் ஆளுநர் மாளிகையில் தங்கி இருக்கிறார். இப்படி இருக்கையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே தலை குனிவு. எப்போதும் திமுக வந்தால் வன்முறையை கையில் எடுக்கும் என்பது வரலாறு. ஆனால் இது குறித்து விளக்கம் கேட்டால் பாஜகதான் குற்றவாளியை பெயிலில் எடுத்தது என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பிடம் கேட்டால் திமுகதான் பெயிலில் எடுத்தது என்று கூறுகிறார்கள். இந்த சம்பவத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை உளவுத்துறையும், என்.ஐ.ஏ-வும் கண்டுபிடித்து தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் இதுவே கடைசி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி இது போன்று ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது. தற்போது தற்போது நடந்த சம்பவத்தை கேப்டன் சார்பாக, தேமுதிக சார்பாக நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய 50 கோடி கையெழுத்துக்கள் வாங்கினாலும் நிச்சயமாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. பிறகு எதற்காக மாணவர்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஆதாயத்துக்காக மாணவர்களை குழப்பி திசை திருப்ப வேண்டாம். கல்வி அறிவில் மிகவும் பின் தங்கியுள்ள மாநிலமான பீகார் இன்று நீட் அவசியத்தை புரிந்துகொண்டு மாணவர்கள் படிக்க தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் தான் மிகவும் அறிவாளியான மாணவர்கள். அவர்களை ஏன் நீட் தேர்வை பற்றி குழப்பி திசை திருப்பி விடுகின்றனர். அரசு என்பது மாணவ்ர்களை சரியாக வழிநடத்த வேண்டும்.தற்போது அனைத்து மாணவர்களும் நீட் தேர்வு எழுத தயாராகி விட்டனர். இன்னும் இரண்டு வருடத்தில் நீட் தேர்வில் அதிகம் வெற்றி பெற்ற மாணவர்களாக தமிழ்நாடு மாணவர்கள் இருப்பார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.


Share it if you like it