கடந்த ஆண்டு ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று, 6வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அனைவரும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதில் அந்த அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் கோப்பையை தனது காலுக்கு ஸ்டாண்ட் போல் வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவு செய்திருந்தார்.
இதனை கண்ட சில கிரிக்கெட் ரசிகர்கள் உலகக் கோப்பையை மிட்செல் மார்ஷ் அவமதித்துவிட்டார் என கடுமையாக சாடி கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். மேலும், ஐசிசி இது தொடர்பாக மிட்செல் மார்ஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிரிக்கெட் விளையாட்டில், பல அணிக்களுக்கு உலகக் கோப்பை என்பது கனவாக இருந்து வரும் பட்சத்தில், அதனை மதிக்காமல் காலின் கீழ் வைத்திருப்பது கவலை அளிக்கிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த 9வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக உலக கோப்பையை வென்றது. வெற்றியை தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அறிவித்தனர்.
உலக கோப்பை வென்ற சந்தோஷத்தில் விளையாடிய மைதானத்தின் மண்ணை அள்ளி தின்றார் அணியின் கேப்டன் ரோகித் சர்மா.மேலும் அந்த கோப்பையை கட்டிப்பிடித்து உறங்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
உலக கோப்பையை கொஞ்சம் கூட மதிக்காமல் அதனை காலுக்கு கீழ் வைத்து அவமரியாதை செய்த ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் எங்க ? விளையாடி ஜெயித்த மைதானத்தோட மண்ணை சாப்பிட்டு கோப்பையை தனது கட்டில் பக்கத்தில் வைத்து உறங்கிய இந்திய வீரர் ரோகித் சர்மா எங்க ? இவ்வாறு சமூக வலைத்தளங்களில் ஆஸ்திரேலியாவை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.