என் குடும்பத்தில் இருந்து எனது மகனோ, மருமகனோ, யாரும் எனக்கு பிறகு அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று தமிழக முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தற்பொழுதைய தமிழக முதல்வருமான ஸ்டாலின் கூறியிருந்தார். அதன் பின் நடந்ததை தமிழக மக்கள் நன்கு அறிவர்.
தி.மு.க நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களின் அலுவலங்களில் மட்டுமே காட்சியளித்த உதயநிதியின் புகைப்படம், தற்பொழுது தி.மு.க MLA, MP-க்களின் அலுவகங்களில் இடம் பெற்று உள்ளதாக பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வரும் நிலையில். உதயநிதியின் புகைப்படம் தற்பொழுது தலைமை செயலகம் வரை வந்து விட்டதாக பலர் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.கவிற்கு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹிந்திக்கு எதிராக தீ குளித்து மரணம் அடைந்தவர்களின் புகைப்படம் தி.மு.க அலுவலகத்தில் இல்லை ஆனால் உதயநிதியின் புகைப்படம் உள்ளது. தொண்டர்களை பலி கொடுத்து தலைவர்களை உருவாக்கும் கட்சி தி.மு.க என்று பா.ஜ.க தலைவர் மிக கடுமையாக சாடியுள்ளார்.
ஸ்டாலினுக்கு முன்பே தி.மு.க-வில் இணைந்தவரும் அடுத்த முதல்வராக வர வேண்டிய துரைமுருகன் புகைப்படம் கூட தி.மு.க மூத்த தலைவர்களின் அலுவலகத்தில் இடம் பெறவில்லை. ஆனால் உதய் அண்ணாவின் புகைப்படம் மட்டும் இடம் பெற்று இருப்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் சுட்டிகாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை செயலகத்தில் இந்த புகைப்படம் என்றால் பட்டத்து இளவரசர் புகைப்படம் வைத்ததின் நோக்கம் ?
ரூ200 ஊபீஸ் மற்றும் பரம்பரை கொத்தடிமைகள் இப்போ வந்து கம்பு சுத்துவாங்க பாரு.#பரம்பரைகால்நக்கிகள் @AIADMKOfficial @arivalayam @mkstalin #udhyanidhi pic.twitter.com/9aROa1detb— Kovai Sathyan (@KovaiSathyan) July 16, 2021