சில ஆண்டுகளுக்கு முன்பு சுஜித் என்னும் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிர் இழந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெற்றோர் செய்த தவறுக்கு அப்பொழுது அட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு தான் காரணம் என்று தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் முதல் முன்களப்பணியாளர்கள் வரை தொடர்ந்து தமிழக மக்கள் மீது தங்கள் எண்ணத்தை திணித்தனர் என்பது அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது. ஸ்டாலின், கனிமொழி, ஜோதிமணி, போன்றவர்கள் சுஜித் அப்பா பிரிட்டோவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர் மேலும் தி.மு.க சார்பில் நிதி உதவியும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்க 13-வயது சிறுவன் கொடிக்கம்பம் நடும் பொழுது மின்சாரம் தாக்கி சமீபத்தில் உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தையே கடும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் இது குறித்து தமிழக முதல்வரோ, உதயநிதியோ, இன்று வரை கருத்து தெரிவிக்காமல் கள்ள மெளனம் காத்து வருவது மக்கள் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஜித் இல்லத்திற்கு ஓடிய ஸ்டாலின், ஜோதிமணி, கனிமொழி, இப்பொழுது எங்கே? ஓளிந்து கொண்டு இருக்கிறார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அச்சிறுவனை இழந்து வாடும் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதல். கடந்த நான்கு நாட்களாக இரவு பகல் பாராமல் மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 29, 2019
எக்கா அந்த போர் போட்டு தண்ணி வரலைன்னு அந்த குழியை கூட மூடதவன் இந்த பிரிட்டோ அதுல தான் சுஜித் விழுந்தான் இது இல்லை என்று அந்த பிரிட்டோ சொல்லட்டும் நீ மூடிட்டு போ
— கட்டெறும்பு (@IZinpFNESbre3kq) October 25, 2020