கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் பேருந்தை ஓட்டியதாகவும் சில நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாகவும் பொதுமக்கள் ஓட்டுனரை பிடித்து சரமாரி கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தன் மேல் இருந்த தவறை ஒப்புக்கொள்ளாமல் “பொதுமக்களிடம் நீ யார்ரா என்னை கேள்வி கேட்க ? நீ எங்க வேணும்னாலும் சொல்லிக்கோ போ” என திமிராகவும் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த பெண்களை முகம் சுளிக்க வைத்தது. இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை விட்டு நீங்காத நிலையில் குடிபோதையில் அரசு பேருந்தை ஓட்டி மீண்டும் ஒரு விபத்து ஏற்படுத்த முயன்ற ஓட்டுனரின் சம்பவம் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் சென்னையில் அரசு பேருந்து ஒன்றில் ஐடி ஊழியர் ஒருவர் பயணித்து டிக்கெட் எடுப்பதற்கு 200 ரூபாய் நடத்துனரிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்க மறுத்து தன்னிடம் சில்லறை இல்லை என்று கூற எனக்கு டிக்கெட் வேண்டும் என்று சொல்லி ஐடி ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர் டிக்கெட் கேட்ட ஐடி ஊழியரை அடிக்க கை ஓங்கியுள்ளார். இதனை அந்த பயணி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பேருந்தில் ஏறும் அனைத்து பயணிகளும் சில்லறை கொண்டு வர முடியுமா ? நடத்துனர் தான் கொண்டு வர வேண்டும் என்று பேருந்தில் பயணித்த சக பயணிகள் ஐடி ஊழியருக்கு ஆதரவாக பேசினர்.
அரசு பேருந்துகளே பரிதாபகரமான நிலையில் உள்ள நிலையில் அரசு ஊழியர்களே குடித்து விட்டு பேருந்தை இயக்குவது, சரியான சில்லறை கொடுக்கவில்லை என்றால் ஆபாசமாக பேசுவது என அட்டூழியம் செய்தால் அரசு பேருந்துகளை மட்டுமே நம்பி பயணிக்கிற பாமர மக்களின் கதி என்ன ? மக்களின் உயிரோடு விளையாடும் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.