லட்சத்தீவுகளில் கொரோனா பரவ யார் காரணம்?

லட்சத்தீவுகளில் கொரோனா பரவ யார் காரணம்?

Share it if you like it

லட்சத்தீவுகளில் கிட்டத்தட்ட டிசம்பர் வரை கொரோனா கண்டறியப்படவே இல்லை. என்ன காரணம்?  சிறப்பான நிர்வாகம், மக்களின் கட்டுப்பாடு, மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி??? இது எதுவும் இல்லை, தனிமைப்படுத்துதல் விதி  – Quarantine rule மட்டுமே

அது ஒரு தீவு, விமானம் மற்றும் கப்பல் வழியாக மட்டுமே போக முடியும்.  கொரோனா என்பது imported infection. தொற்று பாதித்த ஒருவர் மூலம் மட்டுமே பரவும். லட்சத்தீவை சேர்ந்த யாரேனும் வெளி மாநிலத்திற்கு சென்று, ஊர் திரும்ப வேண்டுமென்றால் 14 நாட்கள் கொச்சியில் quarantine , பின்னர் லட்சத்தீவில் 14 நாட்கள் வீட்டு தனிமை .

தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, உள்ளிட்ட பல மாநிலங்கள் quarantine விதிகள் போட்டன. வெளிநாட்டில் இருந்து வருவோர் 7 நாட்கள் அரசு quarantine முகாம், பின்னர் 7 நாட்கள் வீட்டில் quarantine என இருந்தது. பின்னர் அதை தளர்த்தி 14 நாட்கள் home quarantine என்றார்கள். வெளியூர் போய் திரும்பினாலும் 14 நாட்கள் home quarantine இம்மாநிலங்களில் இருந்தன. தொற்று குறைய, குறைய, E பாஸ், quarantine ஆகியவை தளர்த்தப்பட்ட்து.

லட்சத்தீவு திரும்பிய அவ்வூர்வாசிகள் ‘நாங்கள் என்ன வியாதியஸ்தர்களா, எங்களை quarantine செய்ய கூடாது. ஊரே முழுக்க ஊரடங்கில் உள்ளது, வேலை இல்லை ” என கொடி பிடிக்க, சரி என பிற மாநிலங்களில் தளர்வு அளித்தது போல, லட்சத்தீவிலும் தளர்வு அறிவித்தது அரசு.

வெளி மாநிலத்தில் இருந்து வந்தால் ‘கொச்சியில் தங்க வேண்டாம், 14 நாட்கள் வீட்டு தனிமை போதும், என்று. ஆனால் மண்டையை நன்கு ஆட்டி விட்டு, சும்மா பெயருக்கு 2 நாட்கள் வீட்டில் இருந்து விட்டு, பின்னர் சந்தை, மீன்பிடி, கூட்டம், கும்மி, என்று ஊர் சுற்றினார்கள்.
தமிழ்நாடு, டில்லி, மஹாராஷ்டிராவிலேயே, அவர்களுக்கு என்று ஒரு சட்டம். லட்சத்தீவில் கேட்கவா வேண்டும்.

இந்த ஊர் சுற்றிகள் ஊர் முழுக்க கொரோனாவை பரப்பி விட்டார்கள். நிலைமை இப்படியிருக்க, இவர்கள் கோரிக்கை வைத்து பெற்ற சலுகைகளை தவறாக பயன்படுத்தி விட்டு இப்போது அரசு மீது குற்றம் சுமத்துகிறார்கள். இவர்கள் அரசு சொன்னபடி 14 நாட்கள் வீட்டில் இருந்திருந்தால், கொரோனா பரவியிருக்காது. இவர்கள் பொறுப்பற்று நடந்து விட்டு, அரசை குற்றம் சொல்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.


Share it if you like it