விஷ்வ ஹிந்து பரிஷத்
மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீமான் சேதுராமன்ஜி பத்திரிக்கை செய்தி !
ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை நாட்களில் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு போன்ற விஷயங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆன்மீகவாதியான திருமதி துர்கா ஸ்டாலின் தனது கணவர் முதல்வர் ஸ்டாலினுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ சேதுராமன் கூறினார்.
இது குறித்து அவர் நெல்லையில் கூறியதாவது :
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குரானா காரணமாக ஊரடங்குகள் கட்டுப்பாடுகள் தளர்வுகள் அவ்வபோது அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மே 10ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன,
கடந்த 20 நாட்களுக்கு முன்பு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் ஆடி மாதம் என்பதால் கோயிலுக்கு பெண்கள் பக்தர்கள் செல்வது வழக்கம்.
நதியை பெண் தெய்வமாக போற்றி ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கு நாளாக நதிக்கு பழங்கள் பூக்கள் நைவேத்தியங்களை சமர்ப்பித்து மீன்களுக்கு உணவு வழங்கி அதோடு மக்களும் ஆற்றங்கரையில் அமர்ந்து உணவு உண்பர்.
அது போல் ஆடி செவ்வாய் ஆடி வெள்ளி ஆடி பெருக்கு ஆடி பூரம் நாட்களில் கோவில்களில் அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடத்தி வழிபாடு செய்வர்.
ஆனால் தமிழக அரசு ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில்களை சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்துள்ளது.
ஆடிப்பெருக்கை பொருத்தவரையில் நதி கர்ப்பகாலத்தில் இருப்பதாகவும் அதற்குரிய சடங்குகளை செய்ய வேண்டியது ஹிந்துக்களின் ஐதீகம்.
மேலும் கோயில்களில் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்துவது இந்து மதத்தினரின் நம்பிக்கை மற்றும் மரபு.
நீத்தார் கடன் தவறாமல் செய்ய வேண்டும் என்பது திருவள்ளுவர் கூறியுள்ளார்.
ஆடி அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்வதும் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு இவை அனைத்தும் தனிமனித இடைவெளியுடன் செய்யப்படும் காரியம் தான்.
குரோனா குறித்த விழிப்புணர்வு உள்ளதால் மக்களும் பாதுகாப்பாக தான் வெளியே சென்று வருகின்றனர்.
வழிபாட்டு தளங்களிலும் அரசின் விதிமுறைகளை பின்பற்றியே வழிபாடு செய்து வந்தனர்.
மற்ற மதத்தில் அனைத்து வழிபாடுகளும் எவ்வித தடையுமின்றி நடந்து வருவதை மக்கள் அறிவர்,
இந்நிலையில் ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு ஆடி அம்மாவாசை வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதி மறுப்பு போன்றவை இந்து மக்களின் மனதை வெகுவாக பாதித்துள்ளது,
மேலும் அனைத்து மக்களும் ஓட்டு போட்டு தான் திமுக ஆட்சியில் அமர்ந்து உள்ளது என்பதை ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும்,
இந்நிலையில் இந்து மக்கள் பண்டிகை நடைபெறும் சமயங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகம் விதிக்கப்படுவதாக மக்கள் எண்ணுகின்றனர்.
ஸ்டாலின் மனைவியான திருமதி துர்க்கா அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் செய்து கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றார்.
ஆனால் அவரது கணவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் இந்து சமுதாய பண்டிகையின்போது அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதாக மக்கள் எண்ணுகின்றனர் கோபத்தில் உள்ளனர்,
எனவே இந்த விஷயத்தில் ஸ்டாலினுக்கு தக்க அறிவுரையை திருமதி துர்கா ஸ்டாலின் வழங்கி வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இந்துமத பண்டிகைகளை அரசின் கட்டுப்பாடுகளுடன் நடத்த உரிய ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.