கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மரணங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வயநாடு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிச அரசு அரசு மத்திய அரசின் எச்சரிக்கைப்படி செயல்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படும் என ஒரு வாரத்துக்கு முன்பே கேரள அரசை மத்திய அரசு எச்சரித்தது. தென் மாநிலத்தில் அதிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டதை தொடர்ந்து தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணயத்தின் ஒன்பது குழுக்களை மத்திய அரசு கேரளாவுக்கு அனுப்பியது. ஆனாலும், கேரள அரசு சரியான நேரத்தில் மக்களை வெளியேற்றவில்லை. மீட்புக் குழுக்கள் சென்றதைத் தொடர்ந்து கேரள அரசு எச்சரிக்கையாக இருந்திருந்தால் நிலச்சரிவுகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம்” என்று பேசினார்.
மக்களின் மீது அக்கறை இல்லாத கேரளா கம்யூனிச அரசு துரிதமாக செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்றாமல் மெத்தனமாக செயல்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மக்கள் தாராளமாக வழங்கவேண்டும். பணமாக அளிப்பவர்கள், கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், பொருளாக அளிப்பவர்கள் 1077 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பயன்படுத்திய பழைய பொருட்களை தரவேண்டாம். இவ்வாறு கேரளா முதல்வர் பேசியுள்ளார். இதனால் கேரளா மக்கள் முதல்வர் பினராயி விஜயன் மீது கடும் கோபத்தில் உள்ளனர். மத்திய அரசு கேரளா அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் பல உயிர்களை பலி கொடுத்த கேரளா கம்யூனிச அரசை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.