தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட 12.11.2023 மற்றும் 13.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதற்காக குறிப்பிடப்பட்ட நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 2,246 பேர் மீது 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது அதில் 2,095 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 2,095 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு தடுக்கவந்த அதிகாரிகளை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றவர்களை கைது செய்யாதீர்கள். பண்டிகை நாளில் பட்டாசு வெடித்தது குற்றமென்று அவர்களை மட்டும் கைது செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மணல் கடத்தும் கொள்ளைக்காரர்களை கைது செய்யாத திமுக அரசு, பட்டாசு வெடிக்கும் இந்துக்களை கைது செய்வது ஏன் ? நெட்டிசன்கள் கேள்வி
Share it if you like it
Share it if you like it