குஜராத் மாநிலத்தில் பிறந்த வளர்ந்த வல்லபாய் பட்டேல் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். மக்காத்மா காந்தியின் பால் ஈர்க்கப்பட்டு சுதந்திர வேட்கை கொண்டு ஆங்கிலேர்களை எதிர்த்து அறவழிப் போராட்டம் கண்டார். வெள்ளையனே வெளியேறு போன்ற முக்கிய போராட்டங்களில் பங்கேற்றவர். வரி விதிப்பை எதிர்த்து வரி கொடா இயக்கத்தை முன்னெடுத்தது விவசாயிகள் நலனுக்காக போராடினார்.
இந்தியாவின் முதல் துணை பிரதமர் முதல் உள்துறை அமைச்சர் என்ற சிறப்பை பெற்ற பெற்றுள்ள சர்தார் வல்லபாய் எல்லாவற்றுக்கு மேலாக பிரித்தாலும் சூழ்ச்சி கொண்ட ஆங்கிலேயர்கள் இங்கு பிரிந்து கிடந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை தங்கள் கட்டுக்குள் வைத்து அவர்களை பயன்படுத்திக் கொண்டனர். நாடு இப்படி சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தால் இந்த நிலையில் அகண்ட பாரதம் என்ற லட்சியத்தை
அடைய முடியாது என்று எண்ணிய வல்லபாய் பட்டேல், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் சிதறுண்டு கிடந்த 565 சமஸ்தானங்களை இணைத்து அகன்ற பாரதத்திற்கு வித்திட்டார் இந்த நெஞ்சுரத்திற்காகவே சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் இரும்பு மனிதராக போற்றப்படுகிறார். இன்று அக்டோபர் 31 அவரது பிறந்த நாள்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் பெருமையை போற்றும் வகையில் குஜராத் மாநிலம் நர்மதா நதியோடு 597 அடி உயரத்தில் உலகின் மிகப் பிரம்மாண்ட சிலை திறக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பட்டேலின் சிலையை திறந்து வைத்து பெருமைப் படுத்தினார்.