சமூகநீதி அரசு என மார்தட்டிக் கொள்ளும் திராவிட மாடல் அரசு இதில் கவனம் செலுத்தாதது ஏன் ? – இந்து முன்னணி கேள்வி ?

சமூகநீதி அரசு என மார்தட்டிக் கொள்ளும் திராவிட மாடல் அரசு இதில் கவனம் செலுத்தாதது ஏன் ? – இந்து முன்னணி கேள்வி ?

Share it if you like it

மூச்சுக்கு முந்நூறு முறை சமூகநீதி அரசு என மார்தட்டிக் கொள்ளும் திராவிட மாடல் அரசு இதில் கவனம் செலுத்தாதது ஏழ்மையால் தூய்மை பணி செய்ய வரும் அப்பாவிகள் மீது அக்கறை இல்லாதது தான் காரணமோ என்று திமுக அரசை விமர்சித்துள்ளார் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம். இதுதொடர்பாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் திரு.ம.வெங்கடேசன் அவர்கள் கூறுகையில் ‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தோல் பதனிடும் தொழிற்சாலை இரசாயன கழிவுநீர், உணவு விடுதி கழிவுகளால் ஆன கழிவுநீர் தொட்டி மற்றும் மனித மலம் செல்லும் கழிவுநீர் கால்வாய் முதலியவற்றில் மனிதர்களை கொண்டு சுத்தம் செய்யும் அவலம் பெருமளவில் நடந்து வருகிறது. இவ்வாறு ஏழை எளிய மக்களுக்கு பணத்தாசை காட்டி இவற்றில் இறங்கி சுத்தம் செய்ய சொல்லும் போது இறப்புகள் அதிகமாக நடைபெறுகிறது என்று கூறியுள்ளார் . சமத்துவம் மற்றும் சமூக நீதி பற்றி அதிகம் பேசும் இந்த திராவிட ஆட்சியில் தான் மனிதர்களே கழிவுகளை அகற்றும் கொடுமைகள் அதிகமாக நடைபெறுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் மனிதர்களை கழிவுநீர் கால்வாயில் இறக்கி சுத்தம் செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அதனை முற்றிலுமாக தடை செய்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி திராவிட அரசு மனிதர்களின் உயிர்களை துச்சமென நினைப்பதால் தமிழகத்தில் இன்னமும் இந்த அவலம் தொடர்கிறது. சாக்கடை மற்றும் காவாய்களை சுத்தப்படுத்துவதற்கு தற்போதுள்ள நவீன காலத்தில் எண்ணற்ற கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய அரசும் உள்ளாட்சித் துறைக்கு இது போன்ற கருவிகள் வாங்குவதற்கு பல கட்டமாக நிதிகள் ஒதுக்குகின்றன. திராவிட அரசின் உள்ளாட்சித் துறையின் சீர்கேட்டாலும் ஊழல் பெருச்சாளிகளின் முறையான திட்டமிடுதல் இன்மையின் காரணமாகவும் தமிழகம் இதில் மிகவும் பின்தங்கியுள்ளது. மேலும் இதற்கான நிதி வேறு செலவினங்களுக்கு மாற்றப்படுவதாக குற்றச்சாட்டும் உள்ளது. அதே பேட்டியில் மேலும் மா.வெங்கடேசன் அவர்கள் கூறுகையில் குஜராத் போன்ற மாநிலங்கள் இதில் மிகவும் முன்னேறி உள்ளதாகவும் அங்குள்ள கழிவுகள் அனைத்தும் இயந்திரங்கள் உதவியோடு அகற்றப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மூச்சுக்கு முந்நூறு முறை சமூகநீதி அரசு என மார்தட்டிக் கொள்ளும் திராவிட மாடல் அரசு இதில் கவனம் செலுத்தாதது ஏழ்மையால் தூய்மை பணி செய்ய வரும் அப்பாவிகள் மீது அக்கறை இல்லாதது தான் காரணமோ! தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் ஏறத்தாழ 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பட்டியிலன சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்படியெனில் திராவிட மாடல் அரசுக்கு பட்டியலின சகோதரர்கள் அக்கறையில்லை என்று தானே அர்த்தம். அதேசமயம் பிற துறை அரசு பணியாளர்களுக்கு வரிந்து கட்டிக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கி ஓட்டு வங்கி அரசியல் நடத்துவது கண்கூடு. திராவிட அரசின் இந்த செயல் மனிதநேயத்திற்கு எதிரானது. தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி இனி எங்கும் மனிதர்கள் கொண்டு கழிவுகளை அகற்றுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும். மீறினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்திர விட வேண்டும். மேலும் தூய்மை பணிகளுக்கு வேண்டிய நவீன கருவிகளை வாங்குவதற்கும் தூய்மை பணியாளர்களுக்கு வேண்டிய கையுறை, முக கவசம், நவீன கருவிகள் மற்றும் தேவையான பாதுகாப்பு பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோன்ற மனிதர்களை கொண்டு கழிவுநீர் அகற்ற சுத்தம் செய்ய வைப்பதை ஊடகங்களும் படம்பிடித்து இந்த அவலத்தின் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது மனித குலத்திற்கு நாம் செய்யும் மகத்தான பணி என்பதை இந்துமுன்னணி சுட்டிக் காட்டுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *