வடலூர் சத்ய ஞான சபைக்கு சொந்தமான பெருவெளி இடத்தில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு பெருவெளியில் கட்டிடம் கட்டுவதற்கான திட்டமிடல் தொடங்கியதில் இருந்தே வள்ளலார் பக்தர்கள் பொதுமக்களும் தங்களது கடும் எதிர்ப்பை பல்வேறு போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் தமிழக அரசு அவசர கோலத்தில் கட்டிடப்பணியை துவங்க ஆர்வம் காட்டி வருவதன் மர்மம் என்ன? பெருவெளி மைதான ஆக்கிரமிப்பை அகற்றுவதில் ஆர்வம் காட்டாத தமிழக அரசு அவசர கோலத்தில் கட்டிடம் அமைக்க முயற்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது இந்து முன்னணி. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,
வடலூர் சத்ய ஞான சபைக்கு சொந்தமான பெருவெளி இடத்தில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பெருவெளி இடத்தில் கட்டிடம் எழுப்புவது வள்ளலாரின் விருப்பத்துக்கு எதிரானது என்ற அடிப்படையில் கட்டுமானத்தை தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தொல்பொருள் துறை மற்றும் கலாச்சாரத் துறை, நகர் ஊரக வளர்ச்சித் துறை போன்ற துறைகளிடம் முன் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்ட துவங்குவது ஏன் என்றும், சத்ய ஞான சபைக்கு சொந்தமான மொத்தம் 106 ஏக்கர் பெருவெளி மைதானத்தில் 35 ஏக்கர் அளவுக்கு சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்றும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது, அதற்கு தொல்பொருள் துறையின் முன் அனுமதி பெறாமல் கட்டிட வேலை நடைபெறாது என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது அதை பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் உடனடியாக 35 ஏக்கர் அளவிலான ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும் பெருவெளி மைதானம் அசல் அளவான 106 ஏக்கர் பரப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.
தமிழக அரசு பெருவெளியில் கட்டிடம் கட்டுவதற்கான திட்டமிடல் தொடங்கியதில் இருந்தே வள்ளலார் பக்தர்கள் பொதுமக்களும் தங்களது கடும் எதிர்ப்பை பல்வேறு போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் தமிழக அரசு அவசர கோலத்தில் கட்டிடப்பணியை துவங்க ஆர்வம் காட்டி வருவதன் மர்மம் என்ன? பெருவெளி மைதான ஆக்கிரமிப்பை அகற்றுவதில் ஆர்வம் காட்டாத தமிழக அரசு அவசர கோலத்தில் கட்டிடம் அமைக்க முயற்சிப்பது ஏன்? சர்வதேச மையம் அமைக்கும் பெயரில் ஏற்கனவே இருக்கும் ஆக்கிரமிப்புகளை மறைக்கும் முயற்சியா? மேலும் மீதமிருக்கும் இடத்தையும் ஆக்கிரமிக்கும் திட்டமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதை வரவேற்கும், அதே நேரத்தில் வள்ளலார் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு வள்ளலார் சர்வதேச மையத்தை பெருவெளி மைதானத்தில் அமைப்பதை கைவிட்டு வேறு இடத்தில் அமைக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பு. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.