தாலிபான் மற்றும் ஆப்கான் அரசுக்கு இடையில் நடைபெறும் மோதல்கள் குறித்த தகவல்களை சேகரிக்க சென்ற இந்திய புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதிலும் உள்ள பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டேனிஷ் சித்திக்கிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன், உட்பட பலர் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர். சித்திக் மரணத்திற்கு காரணமான இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறித்து தனது கண்டனத்தையோ, எதிர்ப்பினையோ, தெரிவிக்காமல் ஈயம் பூசினது மாதிரி மழுப்பலான அறிக்கையை தமிழக முதல்வர் வெளியிட்டு இருப்பது ஏன்? இஸ்லாமிய வாக்கு வங்கி போய் விடுமோ என்கின்ற அச்சம் தான் இதற்கு காரணமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Deeply saddened by the passing of Danish Siddiqui. We have lost a photo journalist par excellence whose work underscored his committment to humanity. Heartfelt condolences. #danishsiddiqui pic.twitter.com/BKX5Kd1tfM
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) July 16, 2021