சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்பட்டது. விருது வாங்கியபிறகு மேடையில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியை ஒருமையில் பேசி விமர்சித்திருக்கிறார்.
அப்போது பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி ஒரு பாசிஸ்ட், சர்வாதிகாரி, அவர் தேரில்தான் நிற்பார், விமானத்தில் தான் வருவார், மக்கள் பக்கத்தில் நிற்க மாட்டார், மக்களின் ஸ்பரிசம் தெரியாதவர், மக்களின் வியர்வையை தொடாதவர், மக்களின் பசியை அறியாதவர், அவர் தெய்வமகன் கிடையாது டெஸ்ட் டியூப் பேபி” என பிரதமர் மோடியை இழிவுப்படுத்தி கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். மேலும் பிரதமர் மோடியை விமர்சித்த பிரகாஷ் ராஜ் பிரதமர் அவர்களை ‘அவன், இவன்’ என ஒருமையில் பேசியது பாஜகவினர் மற்றும் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை குவித்துள்ளது
இதுதொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் பதிவில், முதலமைச்சரை அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசியது தவறு தான் என்று சொன்ன நீதிபதி, பிரதமரை அவன், இவன் என்று பேசிய பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுப்பாரா? பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்கள் பிரதமரை அவன், இவன் என்று பேசியதை ரசித்து கேட்டு கொண்டிருந்தது சரி என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா? ஒருமையில் யாரையும் பேசுவதற்கு சவுக்கு சங்கருக்கும் உரிமையில்லை, பிரகாஷ் ராஜுக்கும் உரிமையில்லை. சட்டப்படி தவறு தான். சவுக்கு சங்கரை கைது செய்த காவல்துறை, பிரகாஷ்ராஜை கைது செய்யுமா? முதல்வருக்கு மரியாதை? பிரதமருக்கு அவமரியாதையா? இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் திமுக வை விமர்சித்தால் மட்டும் உடனே கைது செய்கிறார்கள். ஆனால் பிரதமரை விமர்சித்தால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் இந்த திமுக அரசு. முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவர் என்பதை மறந்து எப்போது தமிழக முதல்வராக நடந்து கொள்ள போகிறாரோ தெரியவில்லை.