தூய்மையான அறையும் தரமான உணவும் இல்லாமல் மாணவர்கள் படும் அவலம் !

தூய்மையான அறையும் தரமான உணவும் இல்லாமல் மாணவர்கள் படும் அவலம் !

Share it if you like it

ஐ.ஏ.எஸ் கனவுடன், பல்வேறு மாநிலங்களில் இருந்து, தலைநகர் டெல்லியை நோக்கி படையெடுப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்த மாணவர்களை குறி வைத்தே, ஒரு வர்த்தக வட்டம் இயங்குகிறது. தங்கும் அறைகள், உணவகம் உள்ளிட்ட தேவைக்காக அணுகும் மாணவர்களை , வருவாய்க்கான ஆதாரமாக மட்டுமே கருதுகிறது இந்த வர்த்தக வட்டம்.

ஒரு வழியாக, தங்கும் அறை கிடைத்து, அதில் வசிக்க பழகிவிட்டாலும், பசியாற்றுவதற்கான வாய்ப்புகள் உணவகங்கள் தான். ஆனால் அந்த உணவகங்களில் கிடைப்பது என்னவோ தரமற்ற உணவு தான் என்கிறார்கள் பரிதாபத்துக்குரிய இந்த மாணவர்கள்.

மாணவர்கள் இதுதொடர்பாக கூறுகையில், “உணவு உள்பட ஒவ்வொன்றுமே எங்களுக்குப் பிரச்னை தான். நாங்கள் தென் மாநிலங்களில் இருந்து வந்துள்ளோம். இங்கு தென்மாநில உணவு வழங்கும் ஹோட்டல்கள் இல்லை. 2 – 3 உணவகங்கள் உள்ளன. ஆனால், அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. நான் ஒரு உணவகத்தைக் காட்டுகிறேன். அதைப் பாருங்கள். அந்த உணவகத்தில் எலிகள் ஓடித் திரிகின்றன. ஆனால், ஒரு சாப்பாட்டுக்கு ரூ.150 வசூலிக்கின்றனர். உணவு விஷயத்திலும் தங்கும் அறையிலும் நூலகத்திலும் பயிற்சி மையத்திலும் இதே நிலை தான். ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். ஒரு வகுப்பில் 600 பேர் வரை அமர வைத்து பயிற்சி அளிக்கின்றனர். 600 பேர் வரை ஒரு வகுப்பில் இருக்கும்போது கல்வித்தரம் எப்படி இருக்கும்..?” என தெரிவித்துள்ளார்.

கல்விக்காக டெல்லிக்கு வரும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வதற்காகவே, மாநில அரசு நிதி ஒதுக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள் இந்த மாணவர்கள். ஆனால், அந்த நிதி எங்கே போனது என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்கள் இவர்கள்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *