சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் 50% வரை பயணிகள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்து இருந்தது. பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக முதல்வர் முன்பே தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து நகர்ப்புறங்களில் உள்ள தெருக்களில் பயணம் செய்யும் மினி பேருந்துகளில் டிக்கெட் வசூலிக்கப்பட்டதால் பெண்கள், முதியோர்கள், மாற்று திறனாளிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் பூ மற்றும் பழ விற்பனை செய்யும் பெண்கள், முதியோர்கள், இதன் மூலம் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
ஒயிட்போர்டு பேருந்துகளில் மட்டும் இலவசமாக பெண்கள், முதியோர்கள், பயணிக்கும் நிலையில் மினி பேருந்துகளில் கட்டணம் வசூலிப்பது ஏன்? தமிழக அரசு எங்களுக்கு மினி பேருந்திலும் சலுகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.