திருவையாறு -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அதில் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், அதற்காக முறையாக பதிவு செய்தும் எங்களுக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். நாங்கள் அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்து வரும் கூலி தொழிலாளிகள். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவரிடம் கேட்டால் தாலுகா அலுவலகத்தில் கேளுங்கள் எனவும் அங்கு சென்று கேட்டால் மாவட்ட ஆட்சியரை கேளுங்கள் எனவும் எங்களை அலைக்கழிக்கிறார்கள். மேலும் எங்களை ஆடு மாடு போன்று நடத்துகிறார்கள் என்று மறியலில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். மறியலால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருவையாறு தாசில்தார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தான் அந்த பணத்தை வாங்கி தருவதாக சொன்னவுடன் போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. எங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றால் மீண்டும் மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.