ஏழை, எளியவர்களுக்கு, சிறந்த ஆட்சியை வழங்குவோம் என்று கூறி விட்டு, ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியிலேயே தி.மு.க தலைமையிலான அரசு இன்று வரை செயல்பட்டு கொண்டு வருவதை அறிவார்ந்த தமிழக மக்கள் தற்பொழுது நன்கு உணர்ந்துள்ளனர்.
- தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடப்படும்.
- நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
- சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறுத்தப்படும்.
- டீசல் மீதான வரி குறைக்கப்படும்.
என்று தொடர் பொய்களை கூறிவிட்டு நிதி நெருக்கடி காரணமாக குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1,000 கொடுக்க வாய்ப்பில்லை என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர்க்கு 100 ருபாய் குறைப்போம் என்று கூறிவிட்டு இப்பொழுது சிலிண்டர்க்கு ஒரு பைசா கூட குறைக்க முடியாது என்பது போல் நிதியமைச்சர் பேசி இருப்பது மக்கள் மத்தியில் மீண்டும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அன்று:: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர்க்கு 100 ருபாய் குறைப்போம்.
இன்று:: சிலிண்டர்க்கு ஒரு பைசா கூட குறைக்க முடியாது.மக்கள்:: அப்போ என்ன ….க்கு அண்ணைக்கு அப்படி சொன்னிங்க pic.twitter.com/O3wlSsVVxV
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) August 21, 2021
#விடிந்தும்___விடியாத___விடியல்? pic.twitter.com/UqpaUFrb9e
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) August 21, 2021