வேலூரில் மகளிர் சக்தி சங்கமம் ஸ்ரீ நாரயணீ சக்தி பீடம் அரங்கத்தில் 2023 டிசம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை
காலை 10.30 மணி முதல் மதியம் 1.15 மணி வரை கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கி சிறப்பு விருந்தினர்கள்
திருவிளக்கேற்ற, சுபிக்ஷம் அறக்கட்டளை அறங்காவலர்& வழக்கறிஞர் திரு.சசிகுமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மகளிர் சங்கமம் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி திருமதி கோமதி நவீன்
அவர்கள் விளக்கமளித்தார். துவக்க நிகழ்ச்சியில் பாரத கண்ணோட்டத்தில் பெண்மை பற்றி வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் திருமதி கார்த்தியாயினி அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.

சமுதாய மாற்றத்திற்கான நம் ஐந்து கடமைகள் மற்றும் அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமி விஷயங்களை திரு.புவன்ராஜ் குமார் எடுத்துரைத்தார். பாரத வளர்ச்சியில் பெண்களின் பங்கு ஒரு அருமையான உரையை சுவாமினி கிருஷ்ண ப்ரியம்பாசாரதா ஆஸ்ரமம் (திருவண்ணாமலை) அவர்கள் ஆசியுரையாக கூறினார்.
திருமதி உமா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து 1700 மகளிர்கள்
கலந்துக் கொண்டனர்.
