நேற்று தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்துக்கணிப்புகளை பல தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்டிருந்தது. அதில் அனைத்து ஊடகங்களும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும் 350 சீட்டுக்கு மேல் பாஜக வெல்லும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் கருத்துக்கணிப்புகளை எல்லாம் நாங்கள் நம்பமாட்டோம், மக்களவைத் தேர்தலில் இண்டி கூட்டணிதான் ஜெயிக்கும் என்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இண்டி கூட்டணியின் வெற்றியை கொண்டாட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊடகங்களின் கருத்துக்கணிப்பு முதல் அரசியல் வல்லுனர்களின் கருத்துக்கணிப்பு அனைவரும் பாஜக தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறது என்று கூறி வருகின்றனர். பிரதமர் மோடியோ மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு என்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என்று யோசித்து வைத்திருக்கிறார். இண்டி கூட்டணி தோற்கப்போகிறது என்பதை அவர்களே அறிந்தும் எதற்காக அலுவலகத்தில் பணத்தால் அமைத்து வீண் செலவு செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.