தமிழக அமைச்சர் பிடிஆர் விளக்கமளிப்பாரா ? அண்ணாமலை கேள்வி ?

தமிழக அமைச்சர் பிடிஆர் விளக்கமளிப்பாரா ? அண்ணாமலை கேள்வி ?

Share it if you like it

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணல் ஒன்றை கொடுத்தார். அதில் நேர்காணலில் பிரதமர் மோடி, தேர்தலில் வெற்றிபெறுவதற்காகச் சில கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணத் திட்டத்தை வழங்குகின்றன. இதனால் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50% சதவிகிதம் குறைந்துவிட்டன. இந்தத் திட்டத்தால் பேருந்துகளில் அதிக நெரிசல் ஏற்படுவதோடு, சுற்றுப்புறச் சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதனை விமர்சித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர், “உலகில் எங்காவது பேருந்துச் சேவை இல்லாமல் மெட்ரோ ரயில் சேவை மட்டும் இருப்பதை காட்ட முடியுமா? பேருந்துச் சேவையால் மெட்ரோ சேவையைப் பாதிப்பதை நிரூபிக்க முடியுமா?, சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பல ஆண்டுகளாக மத்திய அரசு நிதி தராமல் நிறுத்தி வைத்திருப்பது ஏன்” எனச் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலவச பேருந்து பயண திட்டம் வெற்றிகரமானது என கூறிய திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சமீபத்தில் அத்திட்டத்தை ஓசி என கூறிய சக திமுக அமைச்சர்களை ஏன் கண்டிக்கவில்லை ? என கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சியில் மக்கள் நலன் மற்றும் சலுகைகள் விலைபோகின்றன. தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஒவ்வொரு அமைச்சர்களும் மாறி மாறி பயனாளிகளை “இலவசம்” என்று இழிவுபடுத்துவது உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை.

1) பால், மின்சாரக் கட்டணம் போன்ற இதர அத்தியாவசியப் பொருட்களின் விலை தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் சேமிப்பு என்று அரசு கூறும் பலன் கொடுமையான நகைச்சுவை. மக்களின் வலது பாக்கெட்டிலிருந்து பணத்தை பறித்து, அதே நபரின் இடது பாக்கெட்டில் நலத்திட்டம் என்கிற பெயரில் திருப்பி வைப்பதில் திமுக கைதேர்ந்தது.

2) திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சுமார் 6000 பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

3) கடந்த 3 ஆண்டுகளாக மின்சார பேருந்துகள் கொள்முதல் வெற்று அறிவிப்பாக மட்டுமே உள்ளது.

திமுக அரசின் மாபெரும் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக நிதி துறையை இழந்த அமைச்சர், தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார். அரசுப் பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரை தமிழக அரசு கெல்ட்ரான் (கேரளா) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது ஏன் ? நமது மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் ஒரு பகுதியைக் கொண்ட இந்த ₹1000 கோடி டெண்டரில் தமிழகத்தின் ELCOT நிறுவனத்திற்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை ? தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விளக்கமளிப்பாரா? இவ்வாறு தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அதிரடி கேள்வி எழுப்பி உள்ளார்.

.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *