வவ்வால் கதை கூறும் சீனா – விஞ்ஞானிகள் கடும் குற்றச்சாட்டு..!

வவ்வால் கதை கூறும் சீனா – விஞ்ஞானிகள் கடும் குற்றச்சாட்டு..!

Share it if you like it

கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளையே ரத்த கண்ணீர் வடிக்க வைத்து வருகிறது. இயற்கையாக உருவானதா அல்லது செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்டதா, என்னும் சந்தேகம் மக்களிடையே இன்றளவும் இருந்து வருகிறது.

2019- ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ். உலகளவில் மக்களிடையே கடும் அச்சத்தையும், வேதனையும், இன்று வரை ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம். சீனாவின் வூகான் ஆய்வு மையத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருப்பதாக பல நாடுகள், பத்திரிக்கைகள், கடும் குற்றச்சாட்டினை சீனா மீது சுமத்தி வருகிறது.

இந்நிலையில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் மற்றும் நார்வே விஞ்ஞானி ஆகியோர் தலைமையிலான குழு ஒன்று. தீவிர ஆய்வினை மேற்கொண்டது. அதன் முடிவுகளை ”டெய்லி மெயில்” பத்திரிகையில் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல. வூகான் ஆய்வகத்தில்  உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைக்க. வவ்வாலில் இருந்து அது உருவானதாக கூறி சீனா தப்பிக்க முயற்சிப்பதாக. விஞ்ஞானிகள் கடும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it