காஷ்மீர் பிரிவினைவாதிக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

காஷ்மீர் பிரிவினைவாதிக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Share it if you like it

பிரிவினைவாதி யாசின்மாலிக் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய என்ஐஏ நீதிமன்றம்.

ஜம்மு & காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத் தலைவராக இருப்பவர் முகம்மது யாசின் மாலிக். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் இவர் குற்றவாளி என என்ஐஏ நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதையடுத்து, கடந்த மே 10 அன்று தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் யாசின் ஒப்புக்கொண்டார்.

பிரிவு 16 (பயங்கரவாதச் சட்டம்), 17 (பயங்கரவாதச் செயலுக்கு நிதி திரட்டுதல்), 18 (பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்தல்), 20 (பயங்கரவாத கும்பல் அல்லது அமைப்பில் உறுப்பினராக இருப்பது) உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. இதற்கு, மறுப்பு எதுவும் தெரிவிக்காது தனது குற்றங்களை நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டார். அந்தவகையில், இவர் மீதான தண்டனை விவரங்கள் வரும் 25ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு மே -18 அன்று கடலூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாசின் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து  இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (2). | இந்தியர்கள் ...

காஷ்மீர் பிரிவினைவாதியை தமிழகத்திற்கு அழைத்து வந்த சீமானுக்கு, அந்நாட்களில் பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதுதவிர, பாகிஸ்தான் துணையுடன் ஜம்மூ காஷ்மீர் மக்களின் நிம்மதியை அழித்தவர்களில் மிக முக்கியமான நபராக இருந்தவர் சையத் அலி ஷா கிலானி. இவர், கடந்த ஆண்டு உடல் நலகுறைவு காரணமாக மரணம் அடைந்தார். இவரது, மறைவையொட்டி பாகிஸ்தான் அரசு துக்கம் அனுசரித்தது. பல அப்பாவி காஷ்மீர் இளைஞர்களின் மனதிலும், எண்ணத்திலும் வெறி பிடிக்கும் அளவிற்கு மதவெறியை திணித்தவர் இந்த கிலானி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மூளைச்சலவை செய்த அப்பாவி இளைஞர்களை கொண்டு பாரத தேசத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட வைத்தது மட்டுமில்லாமல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரில் ரத்த ஆறு ஓட காரணமாக இருந்தவர்.

Image

வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசம் இல்லாத இப்படிபட்ட பிரிவினைவாதிக்கு தான் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சீமானின் நெருங்கிய கூட்டாளியான யாசின் மாலிக் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட காணொளிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

This image has an empty alt attribute; its file name is yasin-maalik.jpg
40 இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதியுடன் யாசின் மாலிக் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

Share it if you like it