2039-ல் பாகிஸ்தான் எனும் நாடே இருக்காது – அனிருத் மிஷ்ரா கணிப்பு!

2039-ல் பாகிஸ்தான் எனும் நாடே இருக்காது – அனிருத் மிஷ்ரா கணிப்பு!

Share it if you like it

பாகிஸ்தான் எனும் நாடு 2038-39-க்குள் இந்தியாவுடன் இணைந்து இருக்கும் என பிரபல ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ரா தனது கணிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.

இந்தியாவின் புகழ் பெற்ற பிரபல ஜோதிடர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத் குமார் மிஸ்ரா. இவர், கணித்து கூறும் பலன்கள் துள்ளியமாக இருக்கும் என்பது அனைவரின் கருத்து. அந்த வகையில், பொது மக்களையும் தாண்டி பிரபல அரசியல் தலைவர்கள் கூட இவரது கணிப்பை மிக உறுதியாக நம்புவர். அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணி நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் காலத்திலேயே நடக்கும் என நான்கு ஆண்டுகளுக்கு முன்பே துள்ளியமாக கணித்து இருந்தார்.

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல்: மோதியின் இந்துத்துவ தோற்றம் மேலும்  வலுவடையுமா? - BBC News தமிழ்

இதனை தொடர்ந்து, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவருக்கும் பிரதமர் ஆகும் வாய்ப்பு பிரகாசமான முறையில் இருப்பதாக முன்பு கணித்து இருந்தார். இப்படிப்பட்ட சூழலில், பாகிஸ்தானிடம் இந்தியா இழந்த (காங்கிரஸ் ஆட்சியில்) பகுதிகளை 2030 – ல் இந்திய மீட்கும் என குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து, 2038-39க்குள் பாகிஸ்தான் எனும் நாடு இருக்காது, அந்நாட்டின், உளவுத்துறை, ராணுவம், பிரதமர் என யாரும் இருக்க மாட்டார்கள். அந்நாடு, இந்தியாவின் ஒரு பகுதியாக மாறி இருக்கும். பாகிஸ்தான் எல்லைகள் இந்திய எல்லையாக மாறி இருக்கும். எந்த, ஒரு ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடாது. மீண்டும் ஒரு பாகிஸ்தான் உருவாகாது என கோள்களின் இயக்கத்தை அடிப்படையாக வைத்து கணித்து இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

யோகி பிரதமரானவுடன், இந்தியாவின் அரசியலமைப்பு பல மாற்றங்களைக் காணும், மேலும் அவர் உலகம் முழுவதும் ஒரு சக்திவாய்ந்த தலைவராகக் காணப்படுவார் என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வகையில், 2039-ல் யோகியே ஆட்சியில் இருப்பார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it