முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை, விட்டு பிரிய விரும்பினால் மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவகாரத்து செய்து வந்தனர். இத்தனை, ஆண்டு காலம் அப்பாவி இஸ்லாமிய பெண்கள், பல கொடுமைகளை அனுபவித்து வந்தனர். இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முத்தலாக் முறைக்கு தடை விதித்து 2017-ல் அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இச்சட்டம் செப்டம்பர் 19-ம் தேதி முதல் (19-09-2019) நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. அந்த வகையில், ‘தலாக்’ சொல்லும் சம்பவங்கள் இந்தியாவில் பெரும் அளவில் குறைந்து உள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மேலும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் இச்சம்பவம் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், உ.பி.யில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
உ.பி மாநிலம் மேற்குப் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள மாவட்டம் பரேலி. இங்குள்ள, பவுண்டியா பகுதியின் இஜாஜ்நகரில் தன் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் உஜ்மா அன்சாரி. இவர், அந்த பகுதியின் பாராதாரி காவல் நிலையத்தில் தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். அப்புகாரில் கூறப்பட்டதாவது; உத்தரப் பிரதேசத்தில் ”வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இருதினங்கள் முன்பாக எனது கணவரின் தாய்மாமா ’தையப் அன்சாரி’ எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்பொழுது, அவர் என்னிடம் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
வாக்குபதிவு நடைபெறும் சமயத்தில், எனது வீட்டிற்கு வந்த அன்சாரி யாருக்கு ஓட்டு போட்டாய் என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, நான் பா.ஜ.க.விற்கு தான் எனது வாக்கினை அளித்தேன். அக்கட்சி முத்தலாக்கை தடுக்க சட்டம் கொண்டு வந்தது. (கொரோனா தொற்று பரவிய சமயத்தில்) ஏழைகளுக்கு இலவசமாக உணவுப்பொருள்களை வழங்கியது. அதனால், எனது வாக்கு பா.ஜ.க.விற்கு என்று பதில் அளித்தேன். இதனை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர் என் மீது கோபம் கொண்டு, எனது கணவரிடம் என்னை வீட்டை விட்டு வெளியேற்றும்படி வற்புறுத்தினார். அதன்படி, கடந்த மார்ச் 11-இல் வலுக்கட்டாயமாக நான் வீட்டிலிருந்து வெளியேப்பட்டேன். இதுதவிர, என்னை முத்தலாக் செய்ய போவதாக கூறி தொடர்ந்து மிரட்டி வருகிறார். மேலும், நான் எவ்வளவு எடுத்துக் கூறியும், கேட்காததால் அவர் மீது இந்த புகார் தெரிவித்துள்ளேன் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
அதே போல, சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தை சேர்ந்த சித்திக் அலி என்ற இளைஞர், தன் மனைவிக்கு கர்பகாலத்தில் பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று நோய்க்காக முத்தலாக் சொல்லி மனைவியை வீட்டை விட்டே விரட்டி அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமா, ஆளூர் ஷாநவாஸ், சீமான், போன்றவர்கள் இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக என்றுமே வாய் திறக்க மாட்டார்கள் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கருத்து.