தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி மற்றும் பா.ஜ.க.வின் தேசிய மாடல் ஆட்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்வேன், யார் தவறு செய்தாலும் உறுதியான நடவடிக்கை எடுப்பேன். எனது கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் மீது கடும் நடவடிக்கை உண்டு என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து, தி.மு.க.வும் ஆட்சிக்கு வந்துவிட்டது. இதன்பிறகு, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர்.
தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கட்டுபாட்டில் இல்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க. மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு போயும் போயும் ஒரு சாமியாரையா? முதல்வராக நியமனம் செய்ய வேண்டும் என தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள் பா.ஜ.க.வை கேலியும் கிண்டலும் செய்து இருந்தனர். 23 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தின் முதல்வராக யோகி பதவியேற்று கொண்ட பின்பு சட்டம் ஒழுங்கில் அதிக கவனம் செலுத்தினார். இதன் காரணமாக, அம்மாநிலத்தில் பெரும் அளவு குற்ற செயல்கள் குறைந்து வருகின்றன. பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தாதாக்கள் யோகி அரசிடம் உயிர் பிச்சை கேட்டு வருகின்றனர். அட்டூழியம், அடாவடிகள் செய்யும் நபர்களுக்கு யோகி அரசில் உடனுக்கு உடன் பொதுமக்கள் முன்னிலையிலேயே ட்ரீட்மெண்ட் கிடைத்து விடுகிறது.
பட்டா நிலத்தில் கொட்டா போட்டு அட்ராசிட்டி செய்யும் கழக கண்மணிகள் குறித்தான செய்திகள் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வந்த வண்ணம் உள்ளது. /https://mediyaan.com/dmk-mla-driver/ அதேபோல, தமிழகத்தில் நிலஅபகரிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருவதாக மக்கள் வேதனையுன் தெரிவித்து வருகின்றனர். இதுதான், இன்றைய திராவிட மாடல் ஆட்சியின் அவலம் என்பது நிதர்சனமான உண்மை. இதே தேசிய மாடலான யோகி ஆட்சியில் யார் தவறு செய்தாலும் குறிப்பாக நில அபகரிப்பில் ஈடுபட்டால் அவர்களுக்கு புல்டோசர் தண்டனை உண்டு. இதன்காரணமாக, அம்மாநில மக்கள் யோகியை புல்டோசர் பாபா என்று அன்புடன் அழைத்து வருகின்றனர்.
எந்த ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது என சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்துக்கணிபு நடத்தப்பட்டது. இதில், சுமார் 60 சதவீதம் பேர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.