நீ தொடவே கூடாது : திமுக எம்எல்ஏ கையை தட்டி விட்ட மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா !

நீ தொடவே கூடாது : திமுக எம்எல்ஏ கையை தட்டி விட்ட மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா !

Share it if you like it

நாடு முழுவதும் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடே உற்று நோக்கிய ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியியில் நேற்று தேர்தல் முடிவில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட நவாஸ் கனி தன்னை எதிர்த்துப் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தை விட 1,66,782 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் சான்றிதழ் வாங்கும் பொழுது ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசனின் கையை சான்றிதழ் மீது படவிடாமல் தட்டி விட்டதால் திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பையும், முகம் சுழிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோவானது வைரல் ஆகி வருகிறது.

புதுவை உட்பட தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இண்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *