தேர்தல் என வந்து விட்டாலே “யார் மனசில் யாரு” என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது.
ஏப்ரல் 6 அன்று நடைபெற இருக்கும், தமிழக சட்டமன்ற தேர்தலில், மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில்,
ஆண் வாக்காளர்கள் 3 கோடி 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர்,
பெண் வாக்காளர்கள் 3 கோடி 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர்,
மூன்றாம் பாலினத்தவர்கள் 7,192 பேர்.
சிறுபான்மையினர் ஓட்டு கணிசமாக உள்ள மாவட்டங்கள்:
கன்னியாகுமரி, வேலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை.
சிறுபான்மையினர்களின் வாக்கு வங்கி, அனைத்து தொகுதிகளிலும், குறைந்த பட்சம் 2 ஆயிரம் முதல், அதிகபட்சமாக 80 ஆயிரம் வரை உள்ளதாக, அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இஸ்லாமியர்கள், தமிழகத்தில் மொத்தம் ஆறு சதவீதம் உள்ளனர். அதே போல மாநிலம் முழுவதும், கிறிஸ்துவர்கள் வாக்கு 7 சதவீதம் இருப்பதாக கூறப் படுகிறது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், 10 தொகுதிகளில், ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளே, வேட்பாளரின் வெற்றி தோல்வியை தீர்மானித்தன. அதே போல, 25 தொகுதிகளில், 3 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளே வெற்றி தோல்வியை நிர்ணயித்தன.
அப்படிப் பட்ட சூழலில், யார் வெற்றி, யார் தோல்வி என்பதை நிர்ணயிப்பதில், சிறுபான்மை வாக்குகள், முக்கிய பங்கு வகிக்கின்றன.
அரவக்குறிச்சி தேர்தல் :
19 மே 2019 அன்று, அரவக்குறிச்சியில் நடந்த இடைத்தேர்தலில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள், தன் கட்சியின் வேட்பாளர் மோகன் ராஜை ஆதரித்து, வாக்கு சேகரிக்கும் போது, இஸ்லாமியர்களை திருப்திப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி, ஒரு இந்து”, எனக் கூறினார்.
அதற்கு காரணமாக சொல்லப் படுவது, பள்ளப்பட்டியில் இஸ்லாமியர்கள் வாக்கு அதிகமாக உள்ளது. அவர்களைத் திருப்திப் படுத்தும் நோக்கில் பேசினால், அவர்களின் வாக்கு கிடைக்கலாம் என்பதற்காகவே, கமல் அவ்வாறு பேசினார்.
சமீபத்தில் கூட, அரவக்குறிச்சி தொகுதியின், பாஜக வேட்பாளர் அண்ணாமலை அவர்களின் தேர்தல் நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய பெண்கள் வந்ததால், “பள்ளப்பட்டி நகர ஜமாஅத்துல் உலமா” கண்டனம் தெரிவித்து இருந்தது.
பாஜகவினர் தங்கள் கொடியுடன், இஸ்லாமியர்கள் மத்தியில், வாக்கு சேகரிக்க சென்ற போது, பள்ளி வாசல் இருக்கும் இடத்திற்கு, பாஜகவினர் வரக் கூடாது, என இஸ்லாமியர்கள் போராடியது, நாம் அனைவரும் அறிந்ததே.
இஸ்லாமிய பெண்கள் பர்தா அணியாமலும், அரசியல் பொதுக் கூட்டங்களுக்கு, வீடு வீடாக சென்று, வாக்கு சேகரிப்பதை, முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறும், இஸ்லாமிய பெண்களுக்கு, அறிவுறுத்தி இருந்தது.
எனினும், மற்ற கட்சியின் கூட்டங்களுக்கு செல்லும், இஸ்லாமிய பெண்களை, இது வரை எந்த உலமா சபையும், எதுவும் கண்டித்ததாக, நமது கண்களுக்கு புலப்படவில்லை.
வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் :
2019 ஆம் ஆண்டு, ஜூலை 25 அன்று மக்களவையிலும், ஜூலை 30 அன்று, மாநிலங்களவையிலும், “முத்தலாக் தடை சட்ட மசோதா” அறிமுகம் செய்யப் பட்டு, நிறைவேற்றப் பட்டது.
வேலூர் நாடாளுமன்ற தேர்தல், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில், 2.5 லட்சம் இஸ்லாமியர் வாக்குகளும், 1.6 லட்சம் கிறிஸ்துவ வாக்குகளும் இருந்தது.
முத்தலாக் தடை சட்டத்திற்கு, அதிமுக ஆதரவு தெரிவித்து, வாக்கு அளித்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்டவேட்பாளர், A.C. சண்முகம் அவர்கள் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அவர்களின் வாக்குகள், அதிமுகவுக்கு செல்லாமல், எதிர்கட்சியான திமுக விற்கு சென்றதே.
தமிழகத்தில் கொண்டு வரப்பட்டு நீக்கப் பட்ட மதமாற்ற தடை சட்டம் :
2002 ஆம் ஆண்டு, அக்டோபர் 31ஆம் தேதி, தமிழ்நாடு சட்டமன்றத்தில், “மதமாற்ற தடை சட்டம்” கொண்டு வரப்பட்டு, தீர்மானத்திற்கு ஆதரவாக 140 பேரும், எதிராக 73 பேரும் வாக்களித்து, “மதம் மாற்றும் தடை சட்டம்” நிறைவேற்றப் பட்டது.
இதனால் சிறுபான்மையினர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர். அதற்கு அடுத்ததாக, 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது.
இதனால் மனம் மாறி, மே மாதம், 2004 ஆம் ஆண்டு, மதமாற்ற தடை சட்டத்தை திரும்பப் பெறுவதாக, அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்து, அதற்கான சட்டத்தை மே 18, 2004 ஆம் ஆண்டு அன்று, பிறப்பித்தார்.
தமிழக தேர்தலில் ஓவைசி:
ஹைதராபாத்தை சேர்ந்த ஓவைசி அவர்கள், தமிழக தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால், அதற்கு முக்கிய காரணம், அவர் சார்ந்து உள்ள மதமே.
சட்டமன்ற தேர்தலில், நடிகர் ரஜினிகாந்த் போட்டியிடுவதாக கூறிய போது, அவரை கன்னடர், மராத்தியர் எனக் கூறிய அரசியல் கட்சிகள், முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களை மலையாளி எனக் கூறிய கட்சிகள், முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கன்னடர் எனக் கூறிய கட்சிகள் எதுவும், ஓவைசியை வெளி மாநிலத்தவர் என கூறவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவர் சார்ந்து இருக்கும் மதம்.
தமிழகத்தில் அவரோடு கூட்டணி வைத்து போட்டியிட முயல்வது, அவருடைய செல்வாக்கால். அவருக்கு கிடைத்த வாக்குகள், மதப் பற்று மிக்க இஸ்லாமியர்கள் ஓட்டு, என்பது நமக்கு கண் கூடாக தெரிகின்றது.
ராமர் ரதம்:
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராமர் ரதம் தமிழகத்திற்கு வந்தது. அது வரக் கூடாது என திமுக, மதிமுக, விசிக, காங்கிரஸ், மக்கள் நீதி மையம், ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி, தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சிகள் தமிழகம் முழுவதும் பெரிய போராட்டம் செய்தது.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள், ராமர் ரதத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என போராட்டம் செய்து, சட்டசபை அவை நடவடிக்கையை நடத்த விடாமல் செய்ய முனைந்தார். அவர் போலவே, ம.ஜ.கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்கள், சட்டசபையிலேயே சபாநாயகர் முன்பே, ரத வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்.
இத்தனைக்கும், அன்றைய சூழ்நிலையில், தமிமுன் அன்சாரி அதிமுகவுடன் நெருக்கமாக இருந்தார். திமுகவும், அன்சாரியும் எதிர் அணியில் இருந்த போதிலும், “ஹிந்து எதிர்ப்பு” என்ற வகையில் ஒன்று சேர்ந்து செயல் பட்டனர்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திருமாவளவன், வைகோ போன்றவர்கள் “ராமர் ரதம்” வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் கைதும் செய்யப்பட்டனர்.
ராமர் என்பவர் அனைத்து இந்துக்களும் வணங்கும் கடவுள். சமீபத்தில் கூட, அயோத்தியில் ராமர் ஆலயம் அமைய வேண்டி, தமிழகத்தில் இருந்து மட்டுமே 108 கோடி ரூபாய் அளவில் நிதி சேகரித்து, தமிழக மக்கள் அனுப்பி உள்ளனர். அந்த அளவிற்கு, ராமர் மேல் அன்பு கொண்டு இருக்கும் தமிழகத்திற்கு, ராமர் ரதம் வரக் கூடாது எனப் போராட்டம் செய்யும் திமுக கூட்டணி கட்சிகளை நாம் ஆதரிக்க வேண்டுமா?
சமீபத்தில் இயற்கை எய்திய அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் A முஹம்மத் ஜான் அவர்கள், குடியுரிமை திருத்த சட்ட (CAA-NRC-NPR) மசோதாவிற்கு ஆதரவாக மாநிலங்களவையில் வாக்களித்தார் என்ற ஓரே காரணத்திற்காக “அகில இந்தியா ஜமாஅத் கூட்டமைப்பில்” இருந்து விலக்கப்பட்டார்.
எந்த ஓரு இஸ்லாமிய கட்சிகளோ, இது வரை, மாற்று மதத்தினரை வேட்பாளராக நிறுத்தி உள்ளனரா? எந்த ஓரு கிறிஸ்துவ கட்சியோ, இது வரை மாற்று மதத்தினரை வேட்பாளராக நிறுத்தி உள்ளதா?
ஆனால், இந்து மதத்திற்கு வாழ்த்து சொல்லாத கட்சிகள், இந்து பண்டிகைகளை, இந்து மதக் கடவுள்களை அவதூறாக கூறும் கட்சிகள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள், எங்கு அதிகமாக இருக்கின்றார்களோ, அந்த தொகுதிகளில், அவர்கள் சார்ந்த வேட்பாளர்களை நிறுத்தி, போட்டியிட செய்வது ஏன்?
இதனை, மக்கள் நாம்
அனைவரும் சிந்திக்க வேண்டும்!
இந்துக்களுக்கு ஆதரவாக…
இந்துக்களுக்காக வாதாட…
இந்துக்களுக்காக போராட…
இந்துக்களுக்காக பரிந்து பேச…
எந்த கட்சி இருக்கின்றதோ, அவர்களை தேர்ந்தெடுத்து வாக்களித்து, வெற்றி பெற செய்வதன் மூலம், ஒவ்வொரு இந்துவின் குரலையும் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்க செய்வோம்…
இந்து இன்றே ஒன்றுபடு…
- அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai