பிரபல யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவு.
தி.மு.க ஆட்சியில் நிகழும், அட்டூழியங்கள், அடாவடிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், பிரிவினை சக்திகள், செய்யும் முறைகேடுகளை ஆதாரத்துடன் எடுத்து கூறி தமிழக மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த கூடியவர் மாரிதாஸ். இவரின் தொடர் காணொளிகள் மக்களிடம் எழுச்சியையும், ஆளும் கட்சி இவர் மீது கடும் கோவத்தில் உள்ளது என்பதற்கு சான்றாக இந்த வழக்கினை பதிவு செய்து உள்ளது என்பது அனைவரின் கருத்து.
இவர் எழுப்பும் நியாயமான கேள்விகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதை தொடர்ந்து. இவரின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக ஆளும் கட்சி பொய்யான குற்றாச்சாட்டை சுமத்தி இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்குளை ரத்து செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்து இருப்பது., அவர்கள் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு தந்தி டிவியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.