அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து

0
256
அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து

பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி  இன்று தனது 92 வது பிறந்தநாளை கொண்டாகிறார். துணை குடியசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள வாழ்த்து செய்தியில் “லால் கிஷன் அத்வானி சிறந்த அறிஞர், இராஜதந்திரி ஆவார், அவரின் சேவையை நாடே போற்றுகிறது அவர் நீண்ட நாள் நளமுடன் வாழ எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்”. அத்வானி பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் நவம்பர் 8 ஆம் தேதி பிறந்தார். பின்னர் பிரிவினைக்குப்பின்னர் இந்தியாவில் குடியேறினார். 1998 ஆம் ஆண்டு முதல் 2002 வரை உள்துறை அமைச்சராகவும், பின்னர் வாஜ்பாய் அமைச்சரவையில் துணைப்பிரதமராகவும் இருந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here