இந்திய வரலாற்றில் முதன்முறையாக 21,000 கோடி ரூபாயைத் தாண்டி சாதனை !

இந்திய வரலாற்றில் முதன்முறையாக 21,000 கோடி ரூபாயைத் தாண்டி சாதனை !

Share it if you like it

இந்திய வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி ரூ. 21000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து 21,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதிகள் 2023-24 நிதியாண்டில் ரூ.21,083 கோடியாக உயர்ந்துள்ளது, இது முந்தைய நிதியாண்டை விட 32.5% அதிகம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *