அந்தர்பல்டி அடித்த நாராயணசாமி

0
454
அந்தர்பல்டி அடித்த நாராயணசாமி

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயண சாமி தேசிய பெண்கள் ஆணையம் நடத்திய கருந்தரங்கில் டிக்டாக்கை ஒழிக்க வேண்டும் என்று தனது கண்டன குரலை ஆவேசமாக பதிவு செய்திருந்தார். இதனால் புதுச்சேரியில் டிக்டாக்கிற்கு தடைவிதிக்கப்படுமா ? என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது அதற்கு அவர், டிக்டாக்கிற்கு தன்னால் தடை விதிக்க இயலாது என்று கூறியதோடு அதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவுரையை மட்டுமே தான் வழங்கியதாகவும் அந்தர்பல்டி அடித்துள்ளார்.

குழந்தைகள் ஆபாச படத்தை பார்ப்பவர்களை கைது செய்ய எடுத்த நடவடிக்கை போல, டிக்டாக்கினால் நிகழும் சீரழிவுகளை ஆராய்ந்து உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here