நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவருமான அசாதுதீன் ஓவைசி. தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு அண்மையில் குறிப்பிட்டு இருந்தார்.
மதச்சார்பற்ற நாட்டில் பாரதப் பிரதமராக உள்ள மோடி அயோத்தி பூமி பூஜையில் கலந்து கொள்ள கூடாது. அரசியலமைப்பின் அடிப்படையில் பதவி ஏற்றுக்கொண்டவர். மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். 400 ஆண்டுகளுக்கும் மேலாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்துள்ளது. அதை நாங்கள் மறக்க மாட்டோம். அது 1992 ஆம் ஆண்டு சில கும்பலால் இடிக்கப்பட்டது என்று தனது குறிப்பிட்டுள்ளார்.
அசாதுதீன் கருத்திற்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜகவின் இளம் எம்.பி தேஜஸ்வி சூர்யா பின்வருமாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி, மாநில முதல்வர், இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களே அப்பொழுது எங்கே? போனது உங்களது மதச்சார்பின்மை. கோவிலை இடித்து விட்டு தான் ஆலயம் கட்டப்பட்டது. அந்த தவறு இப்பொழுது தலைகீழாகிவிட்டது. தயவு செய்து எங்களுக்கு அரசியலமைப்பு பாடம் எடுக்க வேண்டாம் என்று அவர் கேட்டுகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
When Presidents of India & CM’s of states were organising Iftaar parties in official capacity, in official residences where was your ‘secularism’?
Masjid was built by razing the temple. That mistake is now reversed.
P.S We don’t need lessons in constitutionalism from Razakars. https://t.co/1vk9I2zvIe
— Tejasvi Surya (@Tejasvi_Surya) July 28, 2020