அடிமைப்படுத்தும் சீனா..! ஆதரவு தர வேண்டும் இந்தியா…! குரல் எழுப்பி வரும் குட்டி நாடுகள்…!

அடிமைப்படுத்தும் சீனா..! ஆதரவு தர வேண்டும் இந்தியா…! குரல் எழுப்பி வரும் குட்டி நாடுகள்…!

Share it if you like it

கொரோனாவையும் தாண்டி இப்போ உலக நாடுகளோட முழு கவனமும் இந்திய, சீன எல்லை பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவை விட கொஞ்சம் பலம் பொருந்திய நாடாக  சீனா தன்னை காட்டி கொண்டாலும். இந்தியாவின் போர் வியூகங்கள், அனுபவங்கள், தந்திரங்களுக்கு முன்பு சீனா ஒன்றுமில்லை என்பது வல்லரசு நாடுகளின் கருத்து. சிறிய நாடான வியட்னாமிடம் வாங்கிய மரண அடியே சரியான சான்று.

தன் கட்டுபாட்டின் கீழ் அடிமைப்படுத்தி வைத்துள்ள, குட்டி நாடான தைவானுக்கு பல தொல்லைகளை கொடுத்து வருகிறது சீன கம்யூனிஸ்ட் அரசு. அதற்கெல்லாம் துளியும் கவலைப்படாமல், இன்று வரை சீனாவிற்கே கடும் அழுத்தத்தை தைவான் கொடுத்து வருகிறது. நாங்கள் தனி நாடு சீனாவின் அடிமை நாடு அல்ல என்று அந்நாட்டு மக்களின் குரலாக தைவான் அதிபர் இன்று வரை களத்தில் இன்று போராடி வருகிறார்.

உலக நாடுகளின் நண்பன் என்று போற்றப்பட கூடிய இந்தியாவிற்கு தொடர்ந்து தைவான் அரசு தனது முழு ஆதரவுகளை வழங்கி வருவது சீனாவிற்கு ரத்த கொதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. நேபாள், பாகிஸ்தான், போன்ற நாடுகளை இந்தியாவிற்கு எதிராக சீனா தூண்டி வருகிறது.

ஹாங்காங், திபெத், தைவான், மக்களிடம் இருந்து இந்தியாவிற்கு ஆதரவு தேடி வருகிறது. உலக நாடுகள் மத்தியில் அதிக நற்பெயரை பெற்றுள்ள இந்தியா. மேற்கூறிய நாடுகள் பற்றி ஒரு வார்த்தை கூறினால் சீனாவே அதிர்ந்து விடும் என்பது நிதர்சனமான உண்மை. பாகிஸ்தானை எப்படி உலக நாடுகளிடம் இருந்து இந்தியா தனிமைப்படுத்தியதோ அதே யூக்தியை தான் இந்தியா சீனா மீது செய்ய துவங்கும் என்று பல அரசியல் வல்லூனர்களின் கருத்தாக உள்ளது.

இணையதளம், பத்திரிக்கைகள், ஊடகங்கள், அனைத்திலும் இந்தியாவை பற்றிய செய்திகளே அதிகம் தைவானில் வெளிவர துவங்கியுள்ளது. அண்மையில் இந்திய கடவுளான ராமர் சீன ட்ராகனை ஆழிக்கும் மாதிரியான புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகியது சீனாவிற்க மேலும் BP யை ஏற்றியுள்ளது. சீனா  இந்தியாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. இந்தியா மெளனத்தின் மூலமே சீனாவிற்கு கடும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது.

தற்பொழுது ஒட்டு மொத்த உலகத்தின் வெறுப்பையும் சம்பாரித்துள்ள சீனாவிற்கு தைவான் அரசின் செயல்பாடுகள் கடும் ரணத்தை ஏற்படுத்தி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஹாங்காங் மக்கள் இந்திய நண்பர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று தங்கள் ஆதரவுகளை வழங்கி வருகின்றனர். உய்கூர் இஸ்லாமியர்களின் எதிர்ப்பு சீனாவிற்கு மற்றொரு தலைவலி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கம்- தஞ்சை தாசன்.

 


Share it if you like it