Share it if you like it
- உலகம் முழுவதையும் கொரோனா என்கிற வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் தற்போது இன்னொரு புதிய வைரஸும் சீனாவில் முளைத்துள்ளது. அந்த வைரசுக்கு ஹண்டா என்று பெயரிட்டுள்ளார்கள். இந்த வைரஸ் எலிகள் மூலமாக பரவுவதாக கூறப்படுகிறது. மேலும் சிறுநீர், மலம், உமிழ்நீர் வழியாகவும் பரவும் என்று கூறப்படுகிறது.
- இதன் அறிகுறியாக சோர்வு, காய்ச்சல் மற்றும் தசை வலிகள், தலைவலி, தலைச்சுற்றல், சளி மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் ஆகியவை எச்.பி.எஸ் ஆரம்ப அறிகுறிகளில் அடங்கும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது இருமல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும் என்றும் மற்றும் இறப்பு விகிதம் 38 சதவிகிதம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
- இந்த அறிகுறிகளை கவனிக்காமல் இருக்கும்போது, இது குறைந்த இரத்த அழுத்தம், கடுமையான அதிர்ச்சி, வாஸ்குலர் கசிவு மற்றும் கடுமையான சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
Share it if you like it