மும்பை தாதர் பகுதியில் அண்ணல் அம்பேத்கார் வசித்த ராஜ்க்ருஹா என்ற வீடு உள்ளது. இவ்வீட்டின் முதல் தளம் நினைவு மண்டபமாகவும் மற்ற பகுதிகளில் அம்பேத்காரின் வாரிசுகள் வசித்தும் வருகின்றனர். நேற்று சில மர்மநபர்கள் வீட்டில் இருந்த பூந்தொட்டிகளை உடைத்து முன்பகுதியை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இவ்விஷயத்தில், அம்பேத்காரின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இதுவரை ஒரு கண்டனமும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறார்.
திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி தலித்துகளுக்கு திமுக பிச்சை போட்டது என பேசியபோதும். தயாநிதிமாறன் பட்டியல் சமூகத்தவரை அனைவரும் ஒதுக்கலாம் என்ற தொனியில் பேசிய பொழுதும் வெறும் தோழமை சுட்டு மட்டும் போட்டது என இவர் பொங்கிய பொங்கலில் சொந்த கட்சியினரே வெறுப்படைந்துள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலமாக இருந்தால் பட்டியல் சமூத்தவர்களின் காவலன் போல் மீசையை முருக்குவதும், கூட்டணி கட்சி ஆளும் மாநிலத்தில் பட்டியல் சமூகத்தவரை கொன்றுபோட்டால் கூட முகத்துக்கு மாஸ்க் மாட்டிக்கொள்வதும் தான் இவரின் வழக்கம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
குறிப்பு;- இந்த செய்தியை மீடியான் வெளியிட்டு 2 மணிநேரம் கழித்து, திருமாவளவன் வெறும் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவனுக்கு ஒட்டு போடறவங்களை எல்லாம் முட்டாள்னு நினைச்சுகிட்டு இருக்கான்… எனக்கும் அந்த டவுட் லேசா இரூக்கு