அப்துல் கலாம் பெயரை நீக்கிய ஜெகன்

அப்துல் கலாம் பெயரை நீக்கிய ஜெகன்

Share it if you like it

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பெயரால்  வழங்கப்பட்டு வந்த விருதின் பெயரை Y.S.R புரஸ்கர் என மாற்றி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் எடுக்கும் மாணவர்களை பாராட்டி ஊக்குவிக்க கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியின் போது அப்துல் காலம் புரஸ்கர் விருது ஏற்படுத்தப்பட்டு, தேசிய கல்வி நாளான நவம்பர் 11 ஆம் தேதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஜெகன் தலைமையிலான Y.S.R காங்கிரஸ் அரசு அதை மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதற்க்கு தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க போன்ற எதிர்க்கட்சிகள் தங்களின் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் ஆந்திர அரசின் முடிவை விமர்ச்சித்து வருகின்றனர். கடந்த சிலநாட்களுக்கு முன்னர் ஆந்திராவில் கிராம பஞ்சாயத்து கட்டடத்தில் தேசிய கொடியின் வண்ணத்தை அழித்து Y.S.R காங்கிரஸ் கட்சியின் கொடியின் வண்ணத்தை தீட்டியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it